Thursday 2 April 2015

P.F நிதி பங்குச் சந்தைக்கா ? ஏ.கே.பத்மநாபன் கடும் எதிர்ப்பு.

தொழிலாளர்களின் பி.எப். பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சிஐடியு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிஐடியு அகில இந்திய தலைவர் .கே.பத்ம நாபன் விடுத்துள்ள அறிக்கையில், தொழிலாளர் களின் பி.எப். நிதியிலிருந்து 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்று மத்திய பாஜக கூட்டணி அரசு எடுத்துள்ள முடிவை வன்மையாக கண்டித்துள்ளார்.
பாஜக அரசு கடைப்பிடித்து வரும் தாராளமய மாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு முன் இருந்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சர்கள், இதுதொடர்பாக தொழிற்சங்கங் களுடன் ஆலோசனை நடத்த வேண்டுமென்ற நிலையை எடுத் திருந்தனர். ஆனால் தற்போதைய தொழிலாளர் துறை அமைச்சர் பி.எப். நிதியை பங்குச் சந்தை ஊகவணிகத்தில் ஈடுபடுத்த முழு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மத்திய பட்ஜெட்டில் .பி.எப். சட்டம் மற்றும் இதர வகை சட்டம் 1952ல் திருத்தம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய சட்டத்திருத்தங்களால் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு தகர்க்கப்படும் என சிஐடியு குற்றம் சாட்டுகிறது. பி.எப் சந்தாதாரர்கள் தேசிய ஓய்வூதிய நிதிய திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் சந்தாதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களின் சமூக பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்று .கே.பத்மநாபன் குற்றம்சாட்டியுள்ளார்.நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பி.எப். நிதியை சூறையாடுவதைக் கண்டித்தும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்திருத்தங்களை கண்டித்தும் ஓரணியில் திரள வேண்டும். பாஜக கூட்டணி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: