Saturday 25 April 2015

நளின நகரங்களும், நசுங்கும் கிராமங்களும்...

தில்லியில் விவசாயி கஜேந்திரசிங் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடெங்கிலும் இத்தகைய தற்கொலைகள் நடந்தேறி வருவது 20 ஆண்டு கதையாகும். வியாழன் (23.04.2015) அன்று மக்களவையில் அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களைப் பாருங்கள். நளின நகரங்கள் (ளுஅயசவ ஊவைநைள) பற்றிப் பேசுகிற நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டம், இந்திரா அவாஸ் யோஜனா ஆகிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் அமலாக்கம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.2014-15 ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் கிடைத்துள்ள சராசரி வேலை நாட்கள் ஒரு குடும்பத்திற்கு 40 மட்டுமேயாகும். 100 நாட்கள் வேலையை உறுதி செய்கிற சட்டம் அமலாக்கப்படுகிற லட்சணம் இதுஇச்சராசரி 2012-14 ஆகிய இரண்டாண்டுகளிலும் தலா 46 நாட்களாக இருந்துள்ளது. அதாவது காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் கூட அமலாக்கம் மோசமாக உள்ளது.அருணாச்சல பிரதேசம் (12), புதுச்சேரி (13), மணிப்பூர் (20),நாகாலாந்து (21) எனப் பட்டியலின் கீழ் வரிசையின் சராசரி உள்ளது. இந்தியாவிலேயே அதிகச் சராசரி வேலை நாட்களைத் தருகிற மாநிலம் எது தெரியுமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறக் கூடிய திரிபுராதான். அங்கு சராசரி வேலை நாட்கள் 88.கூலியைத் தாமதமாகத் தருவது, குறைந்தபட்சக் கூலி அளவுகளைக் கூட தர மறுப்பது என்கிற அநியாயம் நடைபெறுகிற மாநிலங்களின் பட்டியல் ஆந்திரா, சட்டீஸ்கர், உத்தரகாண்ட், சிக்கிம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஐம்மு-காஷ்மீர் என நீளும்போது அதிலுள்ள ஒரு முக்கியமான மாநிலம் குஜராத். குஜராத் மாடலை இப்போது நாடு முழுவதும் மோடி அமலாக்குகிறார் போலிருக்கிறது...கே.சுவாமிநாதன்.

No comments: