Saturday 4 April 2015

மோடியின் செல்வாக்கு சரிந்தது - இந்திய டுடே கருத்துக்கணிப்பு..

பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு பெருமளவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், மோடியின் செல்வாக்கு எப்படி? அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது? என்பது குறித்து ஆங்கில வார இதழான இந்தியா டுடே கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் வெள்ளியன்று வெளியிடப் பட்டது.அதில் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு நடத்தியபோது மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று 11 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந்தனர். இது தற்போது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது. மோடியின் ஆட்சி சராசரியாக உள்ளது என்று முன்பு 28 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். ஆனால் இப்போது இது 26 சதவீதமாக குறைந்துள்ளது. மோடியின் ஆட்சி மோசம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேரும் தற்போது 11 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.இதே போல் கடந்த 6 மாதத்தில் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் பேர் குறைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சதவீதம் பேர் ஆம் என்று தெரிவித்தனர். தற்போது அது 61 சதவீதமாக குறைந்துள்ளது.பாதுகாப்பு இல்லை என்று ஏற்கனவே 19 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். வளர்ச்சி திட்டம் தொடர்பாக முன்பு 70 சதவீதம் ஆதரவு இருந்தது. இப்போது 47 சதவீதமாக குறைந்துள்ளது. மதரீதியான விமர்சனங்கள் முன்பு 21 சதவீதமாக இருந்தது.இப்போது 39 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினால் பாஜகவுக்கு ஏற்கெனவே கிடைத்த தொகுதிகளில் 27 தொகுதிகள் குறையும் என்றும், அதே சமயம் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

No comments: