Thursday 2 April 2015

நியாய விலைக்கடை ஊழியர்கள், பொதுமக்களை வஞ்சிக்கும் அதிமுக அரசு!

நியாய விலைக்கடை ஊழியர்களையும், பொது மக்களையும் அதிமுக அரசு வஞ்சித்து வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி யுள்ளன.இதுகுறித்து LPF, CITU AITUC ஆகிய சங்கங்கள்கூட்டாகவெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப் பதாவதுநியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்கள் சரியான எடையுடன் வழங்கப் படுவதில்லை. அரிசி கடந்த சில ஆண்டு களாகவே சமச்சீர் மூட்டைகள் வழங்கப்படு வதில்லை. எடை குறைவு என்பது தொடர்ந்து எழும் குற்றச்சாட்டாகவே உள்ளது.ஆய்வின் போது சரக்கு இருப்பு குறைவிற்கு ஊழியர் பலிகடா வாக்கப்படுகின்றனர். சரக்கு இருப்பு குறைவிற்கு சர்க்கரை 1 கிலோவிற்கு ரூ.50, அரிசி 1 கிலோவுக்கு ரூ.25, மண்ணெண்ணெய் 1 லிட்டருக்கு ரூ.50-ம், கோதுமை 1 கிலோவுக்கு ரூ.25-ம், துவரம்பருப்பு 1 கிலோவுக்கு ரூ.75-ம், உளுத்தம் பருப்பு 1 கிலோவுக்கு ரூ.75-ம், பாமாயில் 1 கிலோவுக்கு ரூ.75 அபராதத் தொகையாக ஊழியர்களிடம் வசூலிக்கப்படுகிறது.இதனால் ஊழியர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்குதல், குடும்ப அட்டையில் பதிவு செய்தல், ‘பதிவேட்டில் பதிவு செய்தல், பொருட்களுக்கான ரசீது போடுதல், கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை, சிறப்பு பொதுவிநியோகத் திட்ட விற்பனை, நாள்தோறும் கூட்டுறவுத் துறைக்கு விற்பனை, இருப்பு விவரங்களை தெரிவித்தல் என கடுமையான பணிச்சுமையோடு பணியாற்றி வருகின்றனர்.மொத்தமுள்ள 23 ஆயிரத்து 513 முழு நேர அங்காடிகளில் 22 ஆயிரத்து 576 விற்பனையாளர்களும், 3940 கட்டுனர்களும் ஆக 26 ஆயிரத்து 516 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நியாய விலைக் கடைக்கும் விற்பனையாளர், கட்டுனர் என இரு ஊழியர்கள் பணியமர்த்தப் படுவதில்லை.இதனால் ஊழியர்கள் குறிப்பாக பெண் ஊழியர்கள் பெரும்பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு நியாய விலைக்கடையிலும் தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களை அமர்த்திக் கொள்வதும், அவர்களுக்கான ஊதியத்தை விற்பனையாளர்களே ஏற்க வேண்டியுள்ளது .நியாயவிலைக் கடைகளில் வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை, தொழிலாளர் துறை என பல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பெரும் பாதிப்பிற்குள்ளாகுவது ஊழியர்களே.இத்தகைய பெரும் நெருக்கடியில் ஊழியர்கள் பணியாற்றி வரும் வேளையில் நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு ஏற்றுக் கூலி, இறக்குக்கூலி, லாரி வாடகை ஆகியவற்றை சங்கமே ஏற்றுக் கொண்டாலும் மாமூல் என்ற பெயரில் பெரும் தொகை ஊழியர்கள் ஏற்க நிர்ப்பந்தப்படுத்தப் படுகின்றனர்.சமச்சீர் மூட்டை வழங்காமலும், எடை குறைவாக பொருட்களை அனுப்பி வைப்பதும், சேதாரக் கழிவு அனுமதிக்காமலும், குடும்ப அட்டைகளுக்கு முழு ஒதுக்கீடு வழங்காமலும் ஒட்டுமொத்த பழியினை ஊழியர்கள் மீது .தி.மு.. அரசு திணித்து வருகிறது.முழு ஒதுக்கீடு தருகிறோம் எனக் கூறும் தமிழக அரசு, அதிகாரிகளை அனுப்பி ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களின் மீது பழி சுமத்தும் போக்குள்ளது. இத்தகைய அரசின் செயல்பாட்டால் சமீபத்தில் பொதுமக்களையும், நியாய விலைக்கடை ஊழியர்களையும் எதிரிகளாக சித்தரித்து திசை திருப்பும் போக்கை மேற்கொண்டுள்ளது.பொதுவிநியோகத் திட்டத்தை சீரழிக்கும் மத்திய அரசின் நிலையினை எதிர்த்து குரல் எழுப்பாமல், மத்திய அரசு திட்டத்தை அமல்படுத்தினால் தமிழக அரசிற்கு ஆண்டிற்கு ரூ. 3,000 கோடி கூடுதலாக செலவாகும் என அறிக்கை போர் நடத்தியவர்கள் இன்று தமிழக நிதிநிலை அறிக்கையில் கடந்த ஆண்டு ஒதுக்கிய ரூ.5,300 கோடிக்கு மேல் ஒரு ரூபாய் கூட இந்த ஆண்டும் ஒதுக்கவில்லை என்பதை கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது.மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியத் தொகை ரூ.499 கோடி வழங்கப்படாமலும் உள்ளது.ஊழியர்களது சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை மீது கடந்த தி.மு.. ஆட்சியில் இரு அரசாணைகள் மூலம் ஊதிய உயர்வு அளித்ததையும், தற்போதுள்ள அரசு ஊதிய உயர்வு அளித்திட சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது வெறும் கண்துடைப்பா என தோன்றுகிறது.எனவே, பொதுவிநியோகத் திட்டத்தை முடக்கி மக்களிடம் உண்மையினை தெரிவிக்க மறுத்து திசை திருப்பும் போக்கைக் கண்டிக்கிறோம். குடும்ப அட்டைகளுக்கான முழு ஒதுக்கீடு வழங்கிடவும், சேதாரக் கழிவு அனுமதித்திடவும், சரக்கு இருப்பு குறைவிற்கு அபரிவிதமாக அபராத தொகையினை வசூல் செய்வதை கைவிட வேண்டுமெனவும், ஊதிய உயர்வு இன்றி உள்ள நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு உடனடியாக ஊதிய உயர்வு அறிவித்திட நடவடிக்கை எடுக்காமல் ஒதுக்கீட்டை குறைத்து திசை திருப்பும் வகையில் ஊழியர்களை மோத விடுவது மற்றும் ஊழியர்கள் மீது அவப்பெயர் சுமத்துவதை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: