Wednesday 8 April 2015

20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை: ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.

செம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஆந்திர மாநில போலீஸ் 20 தொழிளார்களைச் சுட்டுக் கொன்றது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்த நடவடிக்கை கடுமையான மனித உரிமை மீறல் ஆகும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருதுகிறது.தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர், நீதிபதி டி.முருகேசன், 'தற்காப்பு'க்காக சுட்டோம் என்ற வாதம் நியாயமாகாது ஏனெனில் 20 உயிர்கள் துப்பாக்கிச் சூட்டுகு பலியாகியுள்ளன, என்று தெரிவித்தார்.இதனையடுத்து ஆந்திர மாநில உள்துறைச் செயலர், மற்றும் அம்மாநில டி.ஜி.பி. ஆகியோர் போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு 2 வார காலத்திற்குள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

No comments: