Monday 13 April 2015

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்-13.04.15.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959)
ஒரு சிறந்த தமிழ் அறிஞர்சிந்தனையாளர்பாடலாசிரியர் ஆவார்எளிமையான தமிழில் சமூகசீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்இவருடைய பாடல்கள்நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
பிறப்பு வளர்ப்பு குடும்பம்
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான்காடு என்னும் 
சிற்றூரில்அருணாச்சலனார்-விசாலாட்சிஆகியோருக்குஇளையமகனாக13.04.1930-ல்எளியவிவசாயகுடும்பத்தில் பிறந்தார்இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர்கணபதிசுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற 
சகோதரியும் உள்ளனர்பள்ளிப்படிப்பு மட்டுமேகொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும்
கம்யூனிசத்திலும் ஈடுபாடுகொண்டிருந்தார்இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள்.1959-   ஆண்டுஇவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்ததுஅதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம்அடைந்தார்.
எழுத்தாற்றல்பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர்இவருடைய பாடல்கள்
கிராமியப் பண்ணைத் தழுவியவைபாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக்காட்டியவர்இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர்.திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசை
களையும்ஆவேசத்தையும்அந்தரங்க சக்தியுடன்பாடல்களாக இசைத்தார்இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் 
கற்பனை உரமும் படைத்த பலபாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம்ஆண்டு படித்தபெண் 
திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரைபதித்தார்.
கம்யூனிஸ ஆர்வம்
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.தான் பின்பற்றி 
வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில்சலியாது ஈடுபட்டார்.நாடகக் 
கலையில் ஆர்வமும்விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாதபற்றும் கொண்டிருந்தார்தஞ்சையைச் சேர்ந்த வீரத் 
தியாகிகள் சிவராமன்இரணியன் ஆகியோருடன்சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் 
பங்கெடுத்தார்தமது 29 ஆண்டு வாழ்வில்விவசாயிமாடு மேய்ப்பவர்உப்பளத் தொழிலாளர்நாடக நடிகர்என 17
 வகைத் தொழில்களில்ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் செய்த தொழில்கள் நடித்தது மற்றும் பாட்டெழுதியதுமட்டுமே...
கவிஞரை "சுந்தரம்என்று எல்லோரும் அழைப்பார்களாம்உதவி என்று யார் அழைத்தால் ஓடி உதவிசெய்வது 
அவரின் வழக்கம்.அவர் கண் முன்னே யாரும் துன்பப்படும்போது அவரால் அதைஏற்றுக்கொள்ளவே முடியாதாம்.
 அப்படிப்பட்ட மிகப்பெரிய "பொதுநலவாதி". கவிஞர் உயரம் 6 அடிக்குமேல் .. அவர் நண்பர்களுடன் இருக்கும்
 புகைப்படத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம்.உடல் வலுவாகவாட்ட சட்டமாக இருந்ததால் எல்லோரும் 
கவிஞரை உதவிக்கு அழைப்பது வழக்கமாம்.
1.விவசாயி - விவசாய குடும்பத்தில் பிறந்ததால் விவசாயி
2. மாடு மேய்ப்பவன் - சிறுவயதில் கிராமத்தில் எல்லோரும் செய்கின்ற வேலைஆனால் அதைதொழிலாக செய்யவில்லை
3. மாட்டு வியாபாரி - விவசாய குடும்பத்தில் மாடுகள் இருக்கும் , ஆனால் அதை வியாபாரமாக அவர்செய்யவில்லை
4. மாம்பழ வியாபாரி - அவர் வீட்டில் மாமரங்கள் இருந்தது , அதை விற்றுத்தான் ஆகவேண்டும்.
5. இட்லி வியாபாரி - கவிஞர் இதை செய்யவில்லை ((யாருக்கேனும் உதவி செய்திருப்பார்) )
6. முறுக்கு வியாபாரி - கவிஞர் இதை செய்யவில்லை ((யாருக்கேனும் உதவி செய்திருப்பார்) )
7. தேங்காய் வியாபாரி - அவர் வீட்டில் தென்னை மரங்கள்இருந்தது , அதை விற்றுத்தான் ஆகவேண்டும்
8. கீற்று வியாபாரி - தென்னை மரம் இருந்தால் கீற்று இருக்கும்அதை விற்றுத்தான் ஆகவேண்டும்
9. மீன்நண்டு பிடிக்கும் தொழிலாளி - சிறுவயதில் கவிஞர் பொழுதுபோக்கிற்காக செய்தது,ஆனால்அதை தொழிலாக செய்யவில்லை
10. உப்பளத் தொழிலாளி - அவர் கிராமத்திலிருந்து வேலைக்கு உப்பளத்திற்கு செல்வார்களாம் .அவர்களோடு சேர்ந்து 
கொண்டு செல்வார்.இரண்டு , மூன்று தடவை சென்றிருப்பார்.காரணம்என்னவென்று அறிந்தபோது மக்கள் 
உழைக்கையில் நாம் எப்படி ஒன்றும் செய்யாமல் இருப்பது என்றஎண்ணம் தானாம் !!!
11. மிஷின் டிரைவர் - கவிஞர் இதை செய்யவில்லை (யாருக்கேனும் உதவி செய்திருப்பார்)
12. தண்ணி வண்டிக்காரன் - அதிராம்பட்டினத்தில் (அதி வீரர் ராமர் பட்டினம் ) கையில் இழுத்துசெல்கின்ற தண்ணீர் வண்டியை பயன்படுத்தி , இழுத்துக்கொண்டு ஒடுவராம்.ஒரு தடவை தண்ணீர்கொண்டு சென்றால் ரூபாய் மதிப்பில் "அனாதருவார்களாம்.(பொதுவாக வெகுளியான மனம் , சிறுபிள்ளைத்தனமாக , எளிமையாகவும் நடந்துகொள்வாராம் )
13. அரசியல்வாதி - அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிந்தனையை தூண்டக்கூடிய பாடலைபாடினார்.
14. பாடகன் - நல்ல பாடகர் , பாடிக்கொண்டு . தாளமிட்டுதான் பாடல் இயற்றுவாராம்
15. நடிகன் - நாடக மேடைகளில் நடித்திருக்கிறார்
16. நடனக்காரன் - நாடகத்தில் சிலக்காட்சிகளில் நடனமாடியிருக்கலாம்
17. கவிஞன் - உலகம் அறியும்
பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி
சித்தர்களும்யோகிகளும்
சிந்தனையில்,  ஞானிகளும்

புத்தரோடு, ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி.
பட்டுக்கோட்டையார்கிட்டத்தட்ட 187- பாடல்கள் எழுதி உள்ளார்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

பட்டுக்கோட்டையாரின் நினைவினைப் போற்றுவோம்