Friday 10 April 2015

ஏப்ரல்-10 மக்களின் தொண்டர் என்.வி-நினைவு நாள்...

திண்டுக்கல் பஞ்சாலை ஒன்றில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பஞ்சாலை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஒரு இளம் தொழிலாளியை கைது செய்தனர். சிறையில் அடைப்பதற்காக அவரை நகரின் நீதிமன்ற நீதிபதி முன் நிறுத்தினர். முறைப்படி குற்றச்சாட்டை வாசித்து முடித்த நீதிபதி அங்கு நின்ற தொழிலாளியை பார்த்துமில் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்ய தூண்டியதாக உம்மீது குற்றச்சாட்டுஇந்த குற்றச்சாட்டை நீர் ஏற்றுக் கொள்கிறீரா? அல்லது மறுக்கிறீரா?அதற்கு அந்த இளம் தொழிலாளி எந்தவித தயக்கமும் இல்லாமல்நான் ஏற்றுக் கொள்கிறேன்”. தொழிலாளர்களை போராட தூண்டினேன் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் தொழிலாளிகள் போராடினால்தான் நியாயம் கிடைக்கும். அதனால்தான் போராடும்படி தூண்டினேன் என்றார். அத்தகைய துணிச்சல் மிக்க தோழர்தான் என்.வி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட என்.வரதராஜன் அவர்கள் .தோழர் என்.வி அவர்களின் இயக்க வாழ்க்கை முழுவதும் இப்படிப்பட்ட துணிச்சலான, நேர்மையான, கறாரான செயல்பாடுகளே நிறைந்திருந்தன. . .
பாஜக மத்திய ஆட்சிக்கு வந்துள்ள  இந்த காலத்தில் வரலாறு காணாத வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் பொதுவிநியோகம் முற்றிலும் சீரழிப்பு, தொழிலாளர் விரோத போக்குகள் என மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளையும் மக்கள் ஒற்றுமையை பிளவுபடுத்தும் வகுப்புவாத நடவடிக்கைகளையும், தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய அரசு கடைபிடித்து வரும் அதே தாரளமய கொள்கைகளை தமிழக மாநில அரசும் கடைபிடித்து வருவதால் அதனை எதிர்த்த போராட்டங்களையும், தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.மக்கள் போராளி தோழர் என்.வி அவர்களின் இலட்சியத்தை நினைவு கூர்வோம், பின்தொடர்வோம். . .

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

என்.வி.அவர்களின் நினைவினைப் போற்றுவோம்