Saturday 11 April 2015

101/133 : மார்க் அல்ல. . . ரேங்க். . .

ஏப்ரல் 9, 2015 அன்று உலக சமூக வளர்ச்சி குறியீடு அறிக் கை வெளியிடப் பட்டுள்ளது. சமூக, சுற்றுச்சூழல் குறித்த 52 அளவுகோல்களைக் கொண்ட அவ்வறிக்கை 133 நாடுகளில் இந்தியா விற்கு 101வது ரேங்க்கைத் தந்துள்ளது. உடல்நலம், தண்ணீர், சுகாதாரம், தனிநபர் பாதுகாப்பு, வாய்ப்புகள், சகிப்புத் தன்மை, உள்ளடக்கிய வளர்ச்சி, தனியார் சுதந்தி ரம், தெரிவு ஆகியன அளவு கோல்களில் அடக்கம்.இந்தியாவின் ரேங்க் பிரேசில் (42), தென்னாப்பிரிக்கா (63),ரஷ்யா (71), சீனாவை (92) விட கீழாக இருக்கிறது. மேலும் இலங்கை (88), நேபாளம் (98), வங்காளதேசம் (100) ஆகிய அண்டை நாடுகளைவிடவும் குறைவாக உள்ளது.இதிலும் சில குறிப்பான அளவுகோல்களில் இந்தியாவின் நிலைமை மிக மோசம். உடல்நலத்தில் இந்தியாவின் ரேங்க் 120. உள்ளடக்கிய வளர்ச்சி எனில் 128வது ரேங்க்.பெரும்பான்மை மக்களின் நலன்களை தொடாத பொருளா தாரப் பாதை மூலம் கடைசி பெஞ்சில் தேசத்தை உட்கார வைத் துள்ளார்கள்.

No comments: