Tuesday 3 March 2015

நட்டாவை அமைச்சர் பொறுப்பில் விடுவிக்க வேண்டும்: T.K.ரங்கராஜன்.M.P

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழல், முறைகேடு விவகாரம் தொடர்பான நீதிமன்ற  விசாரணை முடிவடையும் வரை மத்திய சுகாதார அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜே.பி. நட்டாவை விடுவிக்க வேண்டும் என்று, மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினார்இதுகுறித்து மாநிலங்களவையில் அவர் திங்கள்கிழமை முக்கிய பிரச்னைகளை எழுப்பும் நேரத்தில் பேசியதாவது:தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மருந்துகள், உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் புகார் எழுந்தது. அப்போது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜே.பி. நட்டா, எய்ம்ஸ் மருந்துகள், உபகரணங்கள் வாங்கிய விவகாரம் குறித்து அதன் கண்காணிப்புப் பிரிவு விசாரணை நடத்தக் கூடாது என்று குரல் கொடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை அப்போதைய மத்திய அரசு நிராகரித்தது.எனினும், கடந்த ஆண்டு மே மாதம் மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. அதில் எய்ம்ஸ் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த சஞ்சீவ் சதுர்வேதி வேறு துறைக்கு மாற்றப்பட்டார். இத் தொடர்ந்து, முந்தைய ஆட்சியில் ஜே.பி. நட்டா விடுத்த கோரிக்கையை தற்போதைய அரசு ஏற்றுக் கொண்டது.மேலும், ஜே.பி. நட்டா மத்திய சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், எய்ம்ஸ் ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக வளாகத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாகின.ஆனால், சம்பவம் நடந்து பல மணி நேரத்துக்குப் பிறகே தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதை வைத்துப் பார்க்கும் போது தீ விபத்து சம்பவம் திட்டமிட்டே செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனவே, எய்ம்ஸ் ஊழல், முறைகேடு விவகாரம் குறித்து தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை முடிவடையும் வரை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜே.பி. நட்டாவை விலக்கி வைக்க வேண்டும்' என்றார் T.K.ரங்கராஜன்.--- தமிழ் ஹிந்து 

No comments: