Tuesday 3 March 2015

இந்திய பொருளாதாரம்பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் மானியங்களால் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் வாழ் வாதாரங்களைப் பெருக்குவதற்கு உதவிடும் விதத்தில் பொதுச் செலவினங் களை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக,பட்ஜெட் மிகவும் சுருங்கி இருப்பதையே பார்க்கிறோம். 2014-15 பட்ஜெட்டில் அறிவித்ததைவிட, இந்த ஆண்டு 7 சதவீத அளவிற்கு பொது செலவினம் குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 1 கோடியே 14 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று 2015-16இல், மதிப் பிடப்பட்டிருக்கிற மொத்த வரி வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.3 சதவீதமாக இருக்கிறது. இது சென்ற பட்ஜெட்டை விட 10.8 சதவீதத்தைவிட குறைவானதாகும்.
சமூகநலத் திட்டங்களுக்கான செலவினங்கள்   
மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்ப டையில் மொத்த மானியம் 2.1 சதவீத மாக இருந்தது, 1.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. (2.60 லட்சம் கோடி ரூபாயிலி ருந்து 2.44 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்திருக்கிறது.) சுகாதாரம் மற்றும் குடும்பநலத் திட்டங்களுக்கான ஒதுக் கீடும் சென்ற ஆண்டு 35 ஆயிரத்து 163 கோடி ரூபாயாக இருந்தது, இப்போது 29 ஆயிரத்து 653 கோடி ரூபாயாகக் குறைந்திருக்கிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புக்காக ஒதுக்கீடு செய் திருக்கும் மொத்த பட்ஜெட் தொகையும் சென்ற ஆண்டு ஒதுக்கிய 6,008 கோடி ரூபாயிலிருந்து 5,634 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான ஒதுக்கீடும் கடுமையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.சென்ற ஆண்டு ஒதுக்கிய தொகையுடன் ஒப்பிடும்போது 5 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. தலித் துணைத் திட்டத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் குறைந்துள்ளது. மொத்த பட் ஜெட்டில் வெட்டு 20 சதவீத அளவில் இருக்கிறது. (அதாவது 20 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது.) ஒருங் கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 8 ஆயிரம் கோடி ரூபாயாக - சரிபாதி அளவிற்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சமூகநலத் திட்டங்களில் கைவைத்துள்ள இந்த அரசு, அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. நேரடி வரிகள் 8 ஆயிரத்து 315 கோடி ரூபாய் அளவுக்குக் குறைக்கப்பட்டு பணக்காரர்கள் பயன்படுமாறு செய்துள்ள அதே சமயத்தில், மறைமுக வரிகளை 23 ஆயிரத்து 383 கோடி ரூபாய் உயர்த்தி மக்களின் மீது சுமைகளை ஏற்றி இருக்கிறது.நேரடி வரியில் இவ்வாறு சலுகைகள் அளித்திருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியப் பணக்காரர்கள் இதுநாள்வரை செலுத்திவந்த செல்வ வரியை முற்றிலு மாக ஒழித்துக்கட்டிவிட்டது. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீத மாகக் குறைத்திருக்கிறது. மூலதன ஆதாய வரி மற்றும் குறைந்தபட்ச மாற்று வரி ஆகியவற்றிலும் அதிக அளவு சலுகைகள் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டிருக் கின்றன.மேலும், மத்திய அரசாங்கம் பணக் காரர்களுக்குக் கொடுத்துள்ள வரிச் சலுகைகளின் காரணமாக (“வரி ஊக்கத் தொகைகள்’’ என்ற பெயரில் பணக்காரர் களுக்கு அளிக்கப்படும் மானியங்கள்) வருவாய் இழப்பு என்பது, பட்ஜெட் நிதிப் பற்றாக்குறையைவிட அதிகமாகும்.
(அதாவது, 2014-15இல் பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட பற்றாக்குறைத் தொகை 5 லட்சத்து 55 ஆயிரத்து 649 கோடி ரூபாயாகும். ஆனால், இவர்களுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகைகள் 5 லட்சத்து 89 ஆயிரத்து 284 கோடியே 20 லட்சம் ரூபாயாகும்.)எனவே, இந்திய பொருளாதாரம் பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் காரணமாகத்தான் தள் ளாடித் தடுமாறிக் கொண்டிருக்கிறதே தவிர ஏழைகளுக்கு அளிக்கப்படும் மானியங்களால் அல்ல. இத்தகு சூழ்நிலை களின் காரணமாக, அரசாங்கத்தின் வருவாயைப் பெருக்குவதற்காக, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத் தனியாருக்குத் தாரை வார்த்திட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதாவது நடப்புச் செலவினங்களுக்காககுடும்பசொத்தையே’’ விற்க முன்வந்திருக்கிறார்கள்.அதே சீர்திருத்தங்கள்தான்மோடி அரசாங்கத்தின் பட்ஜெட் என்பது மன்மோகன் சிங் அரசாங்கம் பின் பற்றிய அதே சீர்திருத்தங்கள்தான். ஆனால் அவர்களைவிட மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நிறைவேற்றத் துணிந்திருக்கிறார்கள். அவர்கள்சொல்லிவந்த அதே சித்தாந்தத்தைத் தான் இவர்களும் கூறுகிறார்கள். அதா வது, நம்முடைய பொருளாதார வளர்ச்சி என்பது அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத்திற்கு அதிக அளவு சலுகைகளை அளிப்பதன் மூலம் முதலீடுகளைக் கவர முடியும் என்று அவர்களும் கூறினார்கள், இவர்களும் இப்போது கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் இதுமட்டுமே வேலைவாய்ப்பையும், வளர்ச்சியையும் அதிகரித்திடாது.இப்போது இவர்களது பட் ஜெட்டின் காரணமாக நம் மக்களின் வாங்கும் சக்தி மேலும் சுருங்கும். ஆட்சியாளர்கள், மூலதனங்களைக் கவர்வதற்காக பல லட்சம் கோடி ரூபாய் களை சலுகைகளாக பன்னாட்டு மற் றும் இந்நாட்டு முதலாளிகளுக்குக் கொட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக (எந்த விதத்திலும் அதனால் வளர்ச்சியோ அல்லது மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றமோ ஏற்படப்போவதில்லை)அத்தொகையை பொது முதலீட்டைக் கணிசமான அளவிற்குப் பெருக்கு வதற்குப் பயன்படுத்தி இருந்தால், அதன் மூலம் நமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், பெருமளவில் வளர்ச்சியை யும் சமத்துவத்தையும் எய்திட முடியும். ஆனால், மோடி அரசாங்கத்தால் அவ்வாறு செய்ய முடியாதுதான். ஏனெ னில் அவ்வாறு செய்துவிட்டால், மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக அள்ளிக் கொடுத்தவர்களுக்கு, அவர்திருப்பிச் செலுத்துவது’’ என்பது இயலாமல் போய்விடும். இந்தியா பறப்பதற்கான காலம் வந்திருப்பதாக நிதி அமைச்சர் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த பட்ஜெட் காரணமாக, பணக்காரர்கள் மேலும் வானளாவப் பறக்கலாம். ஆனால், ஏழைகள் தங்களுக்குப் பேரழிவு காத்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டி இருக்கிறது..: தி இந்து.

No comments: