Monday 2 March 2015

மார்ச் -7 க்குள் GPF விண்ணப்பிக்க வேண்டும்....

மார்ச் -7 க்குள் GPF
* அருமைத் தோழர்களே ! நமது தமிழகத்தில் ERP-ESS பராமரிப்பு பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஊழியர்கள் நேரடியாக ERP-ESS  விண்ணப்பிக்க இயலாதுஆகவே,  2015-மார்ச்  மாதம்  GPF வேண்டுவோர் உடன் முன்பு போல் அதற்குரிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, நமது மதுரை  GM அலுவலகத்திற்கு மார்ச் -7 க்குள்     GPF விண்ணப்பிக்க வேண்டும்.... இம்மாத GPF விண்ணப்பத்தை  ஊழியர்களிடம் பெற்று  7ந்-தேதிக்குள் சென்னை மாநில   அலுவலகத்திற்குஅந்த லிஸ்ட்டை அனுப்ப வேண்டும் என்று தமிழ்   மாநில நிர்வாகம்  உத்திரவிடப்பட்டுள்ளது.   ஆகவே, GPF விண்ணப்பங்களை  உடனடியாக   மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்...
மனமகிழ் சந்தா பிடித்தம் குறித்து ....
 * நமது மதுரை மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் (G.M அலுவலகம் தவிர) மற்ற மனமகிழ் மன்றத்திற்கான சந்தா தொகை பிடிப்பதில் சிரமம் இருக்கிறது எனச் சொல்லி பிடித்தம் செய்யப்படவில்லை இது குறித்து நமது மதுரை மாவட்டFORUM சார்பாக ஆட்சேபனை கடிதம் கொடுத்திருந்தோம். அதன் அடிப்படையில் 02.03.2015 மதியம் அணைத்து சங்கங்களின் சார்பாக நமது பொதுமேலாளரிடம் விவாதித்தோம் நமது நிலைபாட்டை ஏற்று பிடித்ததிற்கு வழிகாட்டப்பட்டுள்ளது. 
  *  அதன்படி ஒவ்வொரு மனமகிழ் மன்றத்திலிருந்தும் பிரதி மாதம் 10 தேதிகளுக்குள் அந்தந்த மனமகிழ் மன்றத்திலிருந்து உறுப்பினர் லிஸ்ட்டையும், தொகையையும் குறிப்பிட்டு  G.M.அலுவலக பொருளர் தோழர் . அன்வர் அலிக்கான் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர் அணைத்து பெயர்களையும் ஒன்றினைத்து கணக்கு அதிகாரிக்கு பட்டியலை கொடுப்பார்.
  * ஒவ்வொரு மாதமும் பிடிக்கப்பட்ட மொத்த தொகையும் அன்வர் அலிக்கானுக்கு ஒப்படைக்கப்படும். அவர் அனைத்து மனமகிழ் மன்ற உறுப்பினருக்கும் அந்தந்த மனமகிழ் மன்ற பொருளரிடம் ஒப்படைப்பார். மேற்கண்ட முடிவுகளை முறையாக அமல்படுத்த வேண்டும்...

No comments: