Monday 5 January 2015

பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் -அ.சவுந்தரராசன் MLA கைது...

பாக்ஸ்கான் தொழிற்சாலையை மூடக்கூடாது என்று வலியுறுத்தி ஆலைக்குள் நுழைய முயன்ற CITUமாநிலத் தலைவர் .சவுந்தரராசன் MLA உள்ளிட்ட ஊழியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் என்று கோரி தொடர்ந்து ஆறு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆலையை திறக்க முடியாது என்று நிர்வாகம் தொடர்ந்து முரண்டு பிடிப்பதால் ஆலையை தமிழகஅரசே ஏற்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மாநில அரசு இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது.
எனவே, சட்டவிரோத கதவடைப்பை ரத்து செய்து ஆலையை உடனே திறக்கவேண்டும் என்று கோரி திங்களன்று (ஜன.5) சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமையில் மீண்டும் ஆலைக்குள் பாக்ஸ்கான் ஊழியர்கள் நுழைய முயன்றனர். ஆனால் ஆலை வாயில் முன்பு காவல்துறையினர் அனைவரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்CITU மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் மாவட்டச் செயலாளர் .முத்துக்குமார் உள்பட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தின் போது பேசிய சவுந்தரராசன், அடுத்தகட்டமாக பாக்ஸ்கான் ஆலையை திறக்கக்கோரி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும என்று எச்சரித்தார். ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் வியாபாரிகளை சந்தித்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments: