Monday 5 January 2015

ஒபாமாவுக்கு அழைப்பு பாசிசப் பாதையின் அடையாளம் BJP அரசு மீது புத்ததேவ்

உலக ஏகாதிபத்தியத்தின் தலைவனாக இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியை இந்திய குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக மோடி அரசு அழைத்திருப்பது, இந்த நாட்டின் ஆட்சி நிர்வாகம்பாசிசப் பாதையில் நடைபோடு வதற்கான ஒரு அறிகுறியே என மேற்குவங்க முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச்சார்யா குற்றம் சாட்டினார்.கொல்கத்தாவில் கட்சியின் வங்க மொழி நாளேடான கணசக்தியின் 49ஆம் ஆண்டு விழாவை துவக்கி வைத்து உரையாற்றிய புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியதாவது:-குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை அழைத்திருப்பதன் மூலம் அந்நிய பன்னாட்டு கம்பெனிகளுக்கும் உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய்பெறுமான வர்த்தக வாய்ப்பு களையும் வரிச்சலுகைகளையும் வாரி வழங்குவதற்கான ஏற்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்திருக்கிறார். உலக ஏகாதிபத்தியத்தின் தலைமைப்பீடமாக இருக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதியை குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது எந்தவிதத்திலும் ஏற்க முடியாதது.இந்த அழைப்பு, மோடியின் ஆட்சியில் இந்த நாட்டின்நிர்வாகம் பாசிசக் கண்ணோட்டத் தோடுதான் செல்லப்போகிறது என்பதை முன்னறிவிக்கும் ஒரு அறிகுறியே.நாடு முழுவதும் வலதுசாரிபாதையில் அரசு நிர்வாகத்தைமுடுக்கிவிட முயற்சிமேற்கொண் டுள்ள மோடி அரசாங்கம், மதவெறி சக்திகளின் கரங்களை வலுப்படுத்தும் வேலைகளை பகிரங்க மாகவே செய்து வருகிறது. இது நாட்டின் அமைதிக்குபெரும் ஆபத்தை விளைவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒபாமாவை எதிர்த்து மனிதச்சங்கிலி
முன்னதாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று ஒபாமாவின் வருகையை எதிர்த்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமாக கடைப்பிடிப்பது என மேற்குவங்க இடதுமுன்னணி முடிவு செய்தது. அன்றைய தினம் மாநிலம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு மனிதச்சங்கிலி இயக்கத்தை நடத்துவது என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒபாமாவின் வருகையை எதிர்த்து இயக்கங்களை நடத்துமாறு 6 இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: