Monday 5 January 2015

ஜனவரி-6,அருமைத்தோழர்.O.P.குப்தா நினைவு நாள் . . .

2013 - ஜனவரி 6 அன்று அருமைத்தோழர்.O.P.குப்தா மறைந்தார். அவர் தான் தங்கி இருந்த "தாதா கோஷ் "பவனிலேயே இறக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெருவித் திருந்தார்,ஆனால் தொழிற்சங்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்,அவரது மகன்களுடன் குடும்பத்துடன் தங்கவேண்டி வந்ததால் டெல்லி இராணுவ மருத்துவ மனையில் 06.01.2013 அன்று நம்மைவிட்டு பிரிந்தார். தோழர்.O.P.குப்தா அவர்கள் சாதாரண தோழர்களுடன் பழகுவது, அணுகுவதுஎளிய முறையில் வாழ்வது, அனைத்து தோழர் களுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருந்த தலைவன்,அதே போன்று தன்னுடைய கருத்தை எதிர்க்கிறார்கள் என்று தெரிந்தாலும் தனது கருத்தை உறுதியாக,தைரியமாக வெளிப்படுத்துவதில் தயங்க மாட்டார்.மாற்று கருத்துக் கொண்ட தலைவர்கள்,தோழர்களிடம் இறுதிவரை உறவை வைத்திருந்தார்.அன்னாரின் நினைவை போற்றுவோம்.... அஞ்சலியை செலுத்துவோம்.
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தோழர் குப்தா அவர்களின் நினைவினைப் போற்றுவோம்