Thursday 8 January 2015

08.01.15 போற்றுதலுக்குரிய போடி 3ம் நாள் தார்ணா ...

அருமைத் தோழர்களே ! நமது BSNL மதுரை  மாவட்ட ஊழியர்கள் + அதிகாரிகள் சங்கங்களின்  கூட்டமைப்பு FORUM முன்கூட்டியே கூடி முடிவெடுத்து முறையாக 11.12.14 அன்றே மக்கள் பிரதிநிதியை வைத்து கையெழுத்து இயக்கத்தை துவக்குவது என்ற நமது அகில இந்திய கூட்டமைப்பு FORUM அறை கூவலுக்கினங்க மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் . . .
*  11.12.14 - மதுரையில் தோழர். ஆர். அண்ணாதுரை, MLA கையெழுத்து துவக்கம்.
*  15.12.14 - திண்டுக்கலில் தோழர்.கே. பாலபாரதி,  MLA கையெழுத்து துவக்கம்.
*  22.12.14 - பெரியகுளத்தில் தோழர். .லாசர், MLA கையெழுத்து துவக்கம்.
    -- ஆகிய நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்தோம்.அதனை தொடர்ந்து
*  06.01.15 -  மதுரை தல்லாகுளம் பகுதியில் நேரு சிலை  CTMX-EXGE முன்பாக தார்ணா.
*  07.01.15 ​​ - திண்டுக்கல்லில், பழனி ரோடு,தொலை பேசியகம் முன்பாக தார்ணா.
*  08.01.15 - போடியில் திருவள்ளுவர் சிலை முன்பாக தார்ணா. 
 தோழர்களே ! கடந்த மூன்று நாட்கள் தார்ணாவில் ஒட்டுமொத்தமாக  71 பெண்கள் உட்பட 721 பேர் கலந்து கொண்ட தார்ணாவை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மதுரை தொலை தொடர்புமாவட்டத்தில் நடத்திமுடித்துள்ளோம்என்பதைமகிழ்யோடுபதிவு செய்கின்றோம்.
BSNL உள்ளிட்ட பொதுத்துறையை பாதுகாப்போம் 
"SAVE BSNL"என்ற தேச பக்த போராட்டத்தை 
தேனி ரெவன்யு மாவட்டத் தோழர்கள் 
குறிப்பாக போடித் தோழர்கள் 
அதிலும் உடன் இருந்து வழிகாட்டி, களப்பணி 
நிகழ்த்திட்ட தோழர்.பி. சந்திர சேகர் 
உள்ளிட்ட அனைவரையும் மாவட்ட மையம் 
மனதார பாராட்டுகிறது.
போடியில் நடைபெற்ற தார்ணாவிற்கு தோழர்.எம்.லட்சம், NFTE மாநிலத் தலைவர் தலைமை தாங்கினார். தோழர்.பி.சந்திர சேகர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். தோழர்.எஸ். சூரியன்FORUM கன்வீனர் தார்ணாவை துவக்கி வைத்து உரையாற்றினார்.
அதன்பின் தார்ணாவின் கோரிக்கைகளை விளக்கி, தோழர்கள்.எஸ். சிவகுருநாதன், எஸ். ஜான்போர்ஜியா, எம். சந்திர சேகர், வா.நேருகே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, சி. முருகன், ரவிமுருகன், பரிமளம், சௌகத் அலி, ராஜேந்திரன், ஈஸ்வரி, முனியாண்டி, தேசிங்கு ஆகியோர்உரை நிகழ்த்தினர்.இறுதியாக தோழர்.எஸ். கருப்பையா,AIBSNLEA-CWC அவர்கள்  நிறைவுரை நிகழ்த்த, ஆர்.கார்த்திகேயன் நன்றி கூற தார்னா இனிதே முடிந்தது.

No comments: