Wednesday 7 January 2015

07.01.15 திறம்பட நடைபெற்ற திண்டுக்கல் தார்ணா...

அருமைத் தோழர்களே ! நமது  BSNL ஊழியர்கள்+அதிகாரிகள் சங்கங்களின் அகில இந்திய FORUM கூட்டமைப்பின் அரை கூவலுக்கிணங்க 3 நாட்கள் தொடர் தார்ணாவின் ஒரு பகுதியாக இரண்டாம்நாள் தார்ணா 07.01.15 புதனன்று திண்டுக்கல் தொலைபேசியகம் முன்பாக  தார்ணா மிகவும் சிறப்பாக தோழர்.சி. விஜய ரெங்கன் தலைமையில் ...நடை  பெற்ற தார்நாவில் 7 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தார்ணாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, தோழர்.ஜே. ஜோதிநாதன் பேசினார்  தார்ணாவை துவக்கிவைத்து நமது மதுரை மாவட்ட   BSNL ஊழியர்கள்+அதிகாரிகள் சங்கங்களின் ( FORUM) கூட்டமைப்பின் கன்வீனர் தோழர்.எஸ். சூரியன், சிறப்புரை நிகழ்த் தினார். கன்வீனர் தனது உரையில்  மத்திய கூட்டமைப்பு இதுகாரும் எடுத்த நடவடிக்கைகள், இயக்கங்கள் குறித்தும் அதேபோன்று மத்திய அரசிற்கு எத்தனை முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் உரிய முறையில் மத்திய அரசு தலையிடவில்லை என்ற தகவலோடு, நாம் இதுகாரும் நடத்தியுள்ள இயக்கங்கள், நடத்த உள்ள இயக்கங்களில் கூடுதல் கவனத்துடனும், சக்தியாக வலுவாக நடத்த வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கினார்.

 அதனை தொடர்ந்து கீழ்க்கண்ட தோழர்கள் 
தார்ணாவின்  கோரிக்கைகளை 
விளக்கி, வலியுறித்தி 
பேசினார்கள்.
தோழர்.எஸ். சிவகுருநாதன், D/S-NFTE & கூட்டஅமைப்பு தலைவர்.
எம் . சந்திர சேகர் , மாவட்டச் செயலர் -SNEA
சி. செல்வின் சத்தியராஜ், மாநில உதவிச் செயலர்-BSNLEU
எஸ்.எ.டி. வாஞ்சி நாதன் AIIEA & நகர கூட்டமைப்பு 
எம். மதன முனியப்பன் -TEPU
சௌட முத்து, AIBSNLEA 
பி. சந்திர குமார் -SNEA
ஜி. ராஜேந்திரன்-NFTE
என். ஈஸ்வரி -BSNLEU
அருளானந்தம் -NFTE
காசிராஜன் -BSNLEU
பரிமள ரெங்கராஜ் -BSNLEU
முத்துகுமார் -SNEA
தார்ணாவை நிறைவு செய்து தோழர்.எஸ். ஜான் போர்ஜியா, BSNLEU மாநில துணைத்தலைவர்  உரையாற்றினார் 
நிகழ்ச்சிக்கு நன்றி கூறினார்  தோழர். உதய சூரியன்.TEPU
சிறப்பான ஏற்பாடு, பங்கேற்பு செய்த திண்டுக்கல் ரெவன்யு மாவட்டத் தோழர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்களை உரித்தாக்குகிறோம்.--எஸ். சூரியன்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

கோரிக்கைகள் வெல்லட்டும்