Thursday 4 December 2014

கருப்புப் பணம்: மார்ச்சிற்குள் -முடிக்க உச்ச நீதிமன்றம் .

ஜெனிவா, எச்.எஸ்.பி.சி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 627 இந்தியர்கள் மீதான தற்போதைய வருமான வரி விசாரணையை மார்ச் மாதத்திற்குள் முடிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்த விசாரணையில் முடிவு ஏற்படாமல் இருந்தால் விசாரணையை மார்ச் மாதத்திலிருந்து மேலும் நீட்டிப்பு செய்யும் முடிவையும் உறுதியாக எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. கருப்புப் பண விவகாரம் குறித்த விசாரணை இன்று தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்சின் முன் டைபெற்றது. அப்போது சிறப்பு விசாரணைக் குழு நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கைகளின் நகல்கள், இது குறித்து நடைபெற்ற கடிதப் போக்குவரத்துகள் ஆகியவற்றை கோரும் மனுதாரர்களுக்கு அந்தத் தகவல்களை எந்த வித மறைப்பும் இன்றி அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதுஇந்தத் தகவல்களைக் கோரும் மனுதாரர்களில் ஒருவரான ராம் ஜேத்மலானி, தனது மனுவில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் சில கடிதங்களையும் ஆவணங்களையும் சில பகுதிகளை மறைத்து அளித்ததாகக் கூறியிருந்தார்.அட்டார்னி ஜெனரல் ரொஹாட்கி சிறப்பு விசாரணைக் குழு அளித்த அறிக்கைகளை அளிப்பதில் எந்த வித பிரச்சனையும் இல்லை என்றும் அதே போல், மார்ச் மாதத்திற்குள் வருமான வரி விசாரணையை முடிப்பதிலும் சிக்கல்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.மேலும், ராம் ஜேத்மலானியின் புகாருக்கு பதில் அளித்த முகுல் ரொஹாட்கி முந்தைய .மு.கூ ஆட்சியின் போது சொலிசிட்டர் ஜெனரல் அளித்த சில ஆவணங்களில் சில பகுதிகள் மறைக்கப்பட்டது ஏன் என்பது பற்றி தங்களுக்குத் தெரியவில்லை என்றார்.இதற்கு நீதிபதிகள் கூறிய போது, “தேதிகளும், அதிகாரிகள் வகித்த பொறுப்புகளும் கைவசம் உள்ளன, நீங்கள் முயற்சி செய்தால் அனைத்தையும் மீட்டு விடலாம்என்றனர்.அடுத்த விசாரணையை ஜனவரி 20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர் நீதிபதிகள்.

No comments: