Wednesday 3 December 2014

அசுத்தம் எப்படி சுத்தத்தை உருவாக்கும்..??

குறைந்து விட்டதோ என்று நீங்கள் நினைத்தால் அதற்கு விளம்பரம் பொறுப்பில்லை. 7 ரூபாயாக இருந்த சோப்பின் விலை 8 ரூபாயாக அதிகரித்திருக்கும். அதற்கான விளம்பரம்தான் இது .அப்படித்தான் மத்திய உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூவிக் கொண்டிருக்கிறார்.புற்றுநோய், காசநோய் மருந்துகளின் விலைகள் குறைந்து விட்டது என்று அறிக்கை விட்டுள்ளார்.
ஒருவேளை, கடந்த 6 மாதங்களில் 9 வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு சாதனை(!) படைத்துள்ள மோடி, அந்த நாடுகள் ஏதாவதொன்றில் இருக்கும் நிலைமையை இவரிடம் சொன்னாரா என்று தெரியவில்லைபுற்று நோய்க்கானகிள்மாக்ஸ்என்ற மருந்து(20 மாத்திரைகள்) தற்போது 8 ஆயிரத்து 400 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதன் விலை 1 லட்சத்து எட்டாயிரம் ரூபாயாக எகிறுகிறது. சர்க்கரை மற்றும் இதய நோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட 108 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் பத்து, பதினைந்து மடங்கு உயருகின்றன.பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் கல்லாக்கள் நிரம்ப வகை செய்து தருகிறார்கள்.
அதைத் திசை திருப்பஇப்போது ஒரு லட்சம் ரூபாய் மட்டுமேஎன்று விளம்பரப்படுத்தினாலும் ஆச்சரியமில்லை. ஒருவேளை, மருந்துகள் துறையையும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் ஒப்படைத்து விட்டார்களோ..?இந்த லட்சணத்தில் சுத்த இந்தியாவை உருவாக்கப் போகிறார்களாம்... அசுத்த கொள்கைகளை வைத்துக் கொண்டு எப்படி சுத்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று கேட்கிறார் தோழர் பிருந்தா காரத். நியாயமான கேள்விதானே..??

No comments: