Tuesday 2 December 2014

யார் ... கொடுத்த தைரியம் ...?

அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் எழுவதுஇயல்பு. மாற்றுக்கருத்துக்களை விமர்சிக்கும் போது அதில் ஒரு கண்ணியமும், கட்டுப்பாடும் இருப்பது அவசியம். ஆனால் பாஜகவினரிடம் இதை எதிர்பார்க்க முடியாது.இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவை நேபாளத்தில் நடந்த சார்க் மாநாட்டின் போது சந்தித்த நரேந்திர மோடி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா வரம்பு மீறி வார்த்தை களை அள்ளி வீசியுள்ளார்.`பிரதமர் மோடியையோ மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத் சிங் போன்றதலைவர்களைப் பற்றியோ வைகோ தொடர்ந்து பேசினால் அவர் செல்லுமிடங்களில் பேசிவிட்டுபாதுகாப்பாக திரும்ப முடியாது. அவரை அடக்குவது எப்படி என்று பாஜக தொண்டர்களுக்கு தெரியும்என்றெல்லாம் பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.இவ்வாறு மிரட்டுவது என்பது எச்.ராஜாவுக்கு புதிதல்ல. தமிழக மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தந்தை பெரியாரை செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே பேசியவர்தான் இவர். நாடாளுமன்ற தேர்தலின்போது இது ஒரு பிரச்சனையாக முன்னுக்கு வந்தது. ஆனால் அப்போது அந்தக் கூட்டணியிலிருந்த வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் எச்.ராஜாவை கண்டிக்கவில்லை. இந்தக் கூட்டணிக்கே நான்தான் காரணகர்த்தா என்று கூறிக்கொள்ளும் தமிழருவி மணியனும் அதைக் கண்டிக்கவில்லை.இதனால் தைரியம் பெற்றுள்ள எச்.ராஜா அடுத்தடுத்து அநாகரிகமான முறையில் பேசத்துவங்கியுள்ளார்.
வைகோவின் கருத்துக்கு மாற்றுக் கருத்துஇருக்குமானால் அதை தெரிவிக்க எச்.ராஜாவுக்கு உரிமை உண்டு. ஆனால் அதை வெளிப்படுத்த ஒரு முறை உண்டு. வீடு திரும்ப முடியாது என் றெல்லாம் மிரட்டுவதை ஜனநாயக எண்ணம் கொண்ட யாரும் ஏற்கமுடியாது.எச்.ராஜாவின் இந்த பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள்கண்டித்துள்ளன. மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்கிற திமிரில் ராஜா பேசுவ தாகவே தெரிகிறது.பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக வெளி யேற வேண்டுமென்று தமிழருவி மணியன் இப்போது வேண்டுகோள் விடுக்கிறார். இவர் தான் பாஜகவுடன் மதிமுக போன்ற கட்சிகளை கொண்டுசேர்ப்பதில் தானாக முன்வந்து மும்முரமாக இருந்தவர். பாஜகவின் குணம் பற்றி அப் பொழுதே இடதுசாரிக் கட்சிகள் எச்சரித்தன. இப்போதும் கூட வைகோ அந்த கூட்டணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவிக்காததுதான் ஆச்சரியமாக உள்ளது.எச்.ராஜா மட்டுமின்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் மோடியை விமர்சிக்கக்கூடாது என்று வைகோ உள்ளிட்டவர்களை மிரட்டியுள்ளார். மோடி பிரதமர் பொறுப்பேற்றபிறகு நாட்டிற்கும், மக்களுக்கும் எதிரான பல்வேறு காரியங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக செய்து வருகிறார். இதுகுறித்து யாரும் விமர்சிக்கக்கூடாது என்று கூற பாஜக வினருக்கு உரிமை இல்லை. ஜனநாயக நாட்டில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை.விமர்சனத்தை ஏற்க மறுப்பவர்கள், வன்முறையை தூண்டுபவர்கள் பாசிச குணம் கொண்டவர்களாகவே இருக்க முடியும். பாஜகவை இப்போதாவது வைகோ போன்றவர்கள் புரிந்துகொண்டால் நல்லது.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

பேச்சு வருத்தமளிக்கிறது ஐயா