Saturday 8 November 2014

BSNL. ப்ரீபெய்டு: இந்தியா முழுவதும் இலவச ரோமிங்...

நமது BSNL நிறுவனம் மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் இலவசரோமிங்வசதியை அறிமுகம் செய்துள்ளது. 2013–ல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இடையில் நிறுத்தப்பட்டஸ்பெஷல் டேரிப் வவுச்சர்’ (STV) தற்போது நவம்பர் 1–ந் தேதி முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் இலவச ரோமிங் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் இருந்தும் BSNL ப்ரீபெய்டு வாடிக்கையாளர் களுக்கு வரும் அழைப்புகள் (இன்கம்மிங் கால்) இலவசமாக்கப்பட்டுள்ளது. இதற்காக 7 நாட்களுக்கு ரூ.33–க்கு ஸ்பெஷல் டேரிப் வவுச்சர் ரீசார்ஜ் செய்ய வேண்டும். வெளிமாநிலம் செல்பவர்கள் இந்த வவுச்சரை பயன்படுத்தினால் அவர்களுக்கு வரும் அழைப்புகளுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தில்லி, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கு சென்றாலும் ரோமிங் கட்டணம் முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வெளிமாநிலத்தில் இருந்து தொடர்பு கொண்டு பேசுவதற்கான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு ரூபாய் ஐந்து பைசா வசூலிக்கப்படும்.இது குறித்து BSNL. இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்சவா கூறுகையில், தேசிய அளவிலான இலவச ரோமிங் வசதி அனைத்து BSNL., GSM. செல்போன் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். ஸ்பெஷல் டேரிப் வவுச்சர்கள் 90 நாட்கள் வரை கிடைக்கும்.இந்த திட்டம் நவம்பர் 1–ந் தேதி முதல் 2015 – ஜனவரி 29–ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றார்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்தி வரவேற்க வேண்டிய அருமையான திட்டம்
வாழ்த்துவோம் வரவேற்போம்