Tuesday 25 November 2014

நாசகர மசோதாதடுத்து நிறுத்துவோம்! - எதிர்க்கட்சிகள் உறுதி.

காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49சதவீதமாக அதிகரித்து அத்துறையை சீர்குலைப் பதற்கான மசோதா உள்பட பல முக்கியத் துறைகளில் சீர்குலைவு மசோதாக்களை எப்படியேனும் நிறை வேற்றுவது என்ற நோக்கத்தோடு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சியில் இறங்கி யிருக்கிறது. மறுபுறத்தில் அதை எதிர்த்து நாடு தழுவிய முறையில் இன்சூரன்ஸ் மற்றும் வங்கி உள்ளிட்ட துறைகளின் ஊழியர்களது ஒன்றுபட்ட போராட்டங்களும் தீவிரமடைந் துள்ளன.இந்தப் பின்னணியில் திங்களன்று துவங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முற்றிலும் அனல்பறக்கும் தொடராகஅமையும் என்பது உறுதியாகியுள்ளது.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 24 திங்களன்று துவங்கியது. முதல் நாளில், முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கபில் கிருஷ்ண தாகூர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் மறைவுக்கு இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.மோடி பேட்டிஇதனிடையே நாடாளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவோம் என்றும் கடந்த காலத்தில் உதவி செய்தது போல இந்தக்கூட்டத்திலும் எதிர்க்கட்சியினர் அரசுக்கு துணை புரிய வேண்டுமென்றும் கூறினார்.சட்டத்திருத்தங்கள்கடந்த கூட்டத்தொடரில் காப்பீட்டு மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு முயற்சித்தது. குறிப்பாக காப் பீட்டு மசோதாவை நிறைவேற்ற முயற்சித்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் முன் முயற்சியாலும், நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஊழியர்களின் மிகப்பெரும் போராட்டங் களாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நிலை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. எதிர்க்கட்சிகளின் ஒன்று பட்ட எதிர்ப்பின் விளைவாக அந்த தொடரில் காப்பீட்டு மசோதாவை மோடி அரசால் நிறைவேற்ற முடிய வில்லை.
அது நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. இப் போது அந்தக்குழு கிட்டத்தட்ட ஒப்புதலை அளித்துவிட்டதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தப் பின்னணியில் எப்படியேனும் முதல் வேலைநாளிலேயே மாநிலங்களவையில் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் அரசு குறியாக உள்ளது. இந்தப் பின்னணியிலேயே எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.காப்பீட்டு மசோதா உள் பட 59 மசோதாக்களை மாநிலங்கள வையிலும், 8 மசோதாக்களை மக்களவையிலும் நிறைவேற்ற அரசு திட்ட மிட்டுள்ளது.எனினும் எந்த மசோதா குறித்தும் விவாதமே நடத்தக்கூடாது என்பதிலும் அரசு கவனமாக இருக் கிறது. குறிப்பாக ஓய்வூதிய நிதி முறைப்படுத்தும் மசோதா, நிலம் கையகப்படுத்தல் திருத்த மசோதா, கம்பெனிகள் மசோதா, நீதித்துறை மேம்பாட்டு மசோதா, குழந்தைத் தொழிலாளர் சட்டத்திருத்த மசோதா, கட்டிட தொழிலாளர் முறைப்படுத்தல் மசோதா, தொழிலாளர் நலச் சட்ட மசோதாக்கள் என பல முக்கிய சட்டங்களை மோசமான முறையில் திருத்துவதற்கு அரசுத் தரப்பில் முன்மொழிவுகள் தயாராக உள்ளன. இந்நிலையில் காப்பீட்டு மசோதா உள்பட எந்த மசோதாவையும் அரசுதனது போக்கில் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டோம் என இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தெரிவித்துள்ளன.
காப்பீட்டு மசோதா மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு மசோதா போன்ற வற்றுக்கு அரசு எதிர்பார்ப்பது போலகண்ணை மூடிக் கொண்டு ஆதரவுஅளித்துவிட முடியாது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, ராஷ்ட்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் இந்த பிரச்சனையில் ஒன்றுபட்டு நிற்கின்றன. பாஜக கூட்டணி கட்சியான சிவசேனாவும் கூடகாப்பீட்டு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே காப்பீட்டு மசோதாவை தேவையில் லாமல் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என பகுஜன் சமாஜ்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். எனினும் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் அரசின் முயற்சி களுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்யும் என்பதால், அரசு திட்டமிட்டபடி காப்பீடு உள்ளிட்ட மசோதாக்கள் இக்கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

No comments: