Wednesday 19 November 2014

அமெரிக்கா-அனாதை குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.

அமெரிக்காவில் வறுமை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீடிலில்லாமல் தெருவில் அனாதையாக திரியும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.வல்லரசு நாடு என கூறிக்கொள்ளும் அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபர் ஒபாமா பதவியில் இருந்து வருகிறார். அமெரிக்கா விலும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. குடும்பத்தில் தனி நபர் வருமானம் போதுமானதாக இல்லையென்பதால் கணவன் , மனைவி இருவரும் ஊழியம் செய்து வருவாய் ஈட்ட நிலையில் உள்ளனர்இந்நிலையில் வீடிழந்த குடும்பத்தினருக்கான தேசிய மையம் என்ற அமைப்பு நாடு முழுவதும் உள்ள மாகாணங்கள், நகரங்கள், கிராமங்கள் என சர்வே நடத்தி கடந்த 2012-2013-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை வெளியிட்டது.அதில் கடந்த ஆண்டு 2.5 மில்லியன் குழந்தைகள், குடும்ப வன்முறை உள்ளிட்ட காரணங்களால் அனாதையாகவிடப்படுவது அதிகரித்துவருகிறது. இதன் மூலம் நாட்டில் வறுமை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 30 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை வீடின்றி தவித்து வருவதாகவும் அவர்களுக்கு போதிய கல்வி வசதி இல்லாம் உள்ளதாகவும், சிலர் இளைஞர்களாக வந்த நிலையில் பள்ளி சென்று கல்வி கற்க பெரும் போராட்டம் நடத்தி வருவதாகவும் அந்தஆய்வில் தெரிவித்துள்ளது.இந்த அமைப்பின் இயக்குனர் கர்மீலா டிகேன்டியா கூறுகையில், 2020-ம்ஆண்டிற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டப்படும் என ஒபாமா அரசு நிர்வாகம் உறுதியளித்துள்ளதாக கூறினார்.

No comments: