Sunday 2 November 2014

தொழிலாளர்களைக் கைவிட்டது நோக்கியாவா, இந்தியாவா?...

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் தன் மக்களை இப்படியா கைவிடுவது?
நோக்கியன் விர்டா என்ற நதிபின்லாந்து மக்களின் பேச்சு வழக்கில் நோக்கியா எனச் சுருங்கிவிட்டது. அந்த நதியின் கரையில் 1868-ம் ஆண்டு அமைந்த காகிதக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைக்குஐடெஸ்டெம் என்கிற உரிமையாளர் நோக்கியா எனப் பெயரிட்டுள்ளார். அடுத்தடுத்து வளர்ந்த நோக்கியா நிறுவனம், 1980-களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட செல்பேசிக்கும் அந்தப் பெயரையே சூட்டிசெல்பேசி உலகில் ஏக சக்ரவர்த்தியாக வளர்ச்சியும் பெற்றது. உலகில் 10 தொழிற்சாலைகள் மூலம் செய்யப்படும் உற்பத்தியைக் கொண்டுசந்தையில் பெரும் பகுதியைத் தன் கையில் வைத்திருந்த நிறுவனம்தான் நோக்கியா.2010-ல் இந்திய செல்பேசிச் சந்தையில் 50% தக்கவைத்திருந்த நோக்கியாநிறுவனம், 2014-ன் ஆரம்பத்தில் 21% ஆகக் குறைந்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் தனது பங்குகளை ஒப்படைத்துவிட்டு,இந்திய நிறுவனத்தை மட்டும் விற்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. நவம்பர் முதல் உற்பத்தி நிறுத்தம் குறித்த அறிவிப்பும்அது ஏற்படுத்தியுள்ள மற்றும் ஏற்படுத்தப்போகும் வேலை இழப்பும்இளம் தொழிலாளர் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் மீதான கேள்விகளையும்உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் முதலீடும் வருவாயும்
செல்பேசி விற்பனையில்இந்தியச் சந்தையைக் கைப்பற்ற எடுத்த முயற்சியிலும் வெற்றி பெற்றது. இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் முன்னரே இந்தியச் சந்தையில் நோக்கியா செல்பேசிகள் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கிய 2006-ல் மட்டும்15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு நோக்கியா செல்பேசிகள் பெரும்புதூரில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகியுள்ளன.இந்தியாவில் நோக்கியா நிறுவனம் 2005,  ஏப்ரல்மாதம் செய்து கொண்ட புரிந்துணர்வுஒப்பந்தம்மூலம்தொடக்கத்தில்ரூ. 675 கோடியும்பின்னர்அடுத்த கட்டத்தில்சில நூறு கோடி ரூபாயும் முதலீடு செய்யப்படும் என்றுஉறுதிப்படுத்தியது. தமிழ்நாடு அரசு தொழில்துறை அரசாணை எண்-59 இந்த விவரத்தை அளித்திருக்கிறது. இதற்காக சிப்காட் மூலம்,  ஸ்ரீபெரும் புதூர்ஏரிக்கரையில், 200 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம்செய்துஏக்கர் ஒன்றுக்கு 4.5லட்சம் ரூபாய்க்கு 99 வருடக் குத்தகைக்குக் கொடுக்கப்படும்பத்திரப் பதிவுக் கட்டணம் 0% என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வுஒப்பந்தத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கிறது என அரசாணைதெரிவிக்கிறது. இதற்கு மேல்வணிக வரிவிற்பனை வரி ஆகியவற்றை 10ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டியதில்லை. வேலை ஒப்பந்த வரிகுத்தகை வரிநுழைவு வரி ஆகியவற்றிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது. இத்தனை சலுகைகளும்,தமிழக இளைஞர்களின்  வேலைவாய்ப்புக்காகவே என அரசுகள் அன்றைக்கு அறிவிப்பு செய்தன.மென்பொருள் இறக்குமதிஅதற்காகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தியது போன்றவை மத்திய வருமான வரித் துறையால் கேள்விக்குள்ளாக் கப்பட்டு,தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி என்று குறிப் பிடப்பட்டுள்ளது. மாநில அரசுவாட் வரியைத் தள்ளுபடி செய்தது. உள்நாட்டு விற்பனைக்குக் கொடுத்த சலுகையைவெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததற்கெல்லாம் அளிக்க முடியாது என்று 2,400 கோடி ரூபாய் வரி கோரி வழக்குத் தொடுத்துமுடிவாகாமல் உள்ளது.இந்தப் பின்னணியில்தான் மைக்ரோசாஃப்ட்நோக்கியாவை விலைக்கு வாங்கியது. இந்திய ஆலையை வாங்க முடியாது என்று மறுத்து விட்டதால்,நோக்கியா பெயரில் செல்பேசி விற்கப்பட்டாலும் இந்தியாவில் உள்ள நோக்கியாவின் உரிமைஒப்பந்த தாரர் என்ற பெயரில் சுருங்கியது. ஒரு திரைப் படத்தில், “மாப்பிள்ளை இவர்தான். ஆனால்இவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது”  என்று வரும் நகைச்சுவையைப் போல்நோக்கியா செல்பேசி விற்பனையாகும்ஆனால்நோக்கியாவுக்குச் சொந்த மில்லை என்கின்றனர்.
கனெக்டிங் பீப்பிள் - டிஸ்கனெக்டிங் எம்ப்ளாயீஸ்
இந்தியாவில் உள்ள நோக்கியா ஆலையைமைக்ரோ சாஃப்ட் வாங்க மறுத்ததால்குறிப்பிட்ட காலத்துக்குகுறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஆர்டர் என்று ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறுகிறார்கள். எனவேமுதலில் ஒப்பந்தத்  தொழிலாளர்கள்பயிற்சித் தொழிலாளர்கள் என்று   5,000   தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர், 4,500 நிரந்தரத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வெளியேற் றப்பட்டார்கள். உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களிலும் இது பிரதிபலித்தது. அங்கும் விருப்ப ஓய்வு,ஆலை மூடல் காரணமாக சுமார் 5,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.மேலும்பல்லாயிரம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இளம் தொழிலாளர்கள் தங்கள் வேலையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறார்கள். அரசுகளும் மாத காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் மவுனம்  சாதிக்கின்றன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டதுஅவர்களின் எதிர்காலம்குடும்ப நிலை போன்றவை குறித்து அரசுகளிடம் எந்தப் பதிலும் இல்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று தன்னைப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் ஒரு நாடுதன் மக்களை இப்படியா கைவிடுவது?

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அரசானது மக்களைக் கைவிடக் கூடாது
அரசே மக்களுக்காகத்தானே