Saturday 1 November 2014

பொருளியல் அரங்கம் - க.சுவாமிநாதன்...

மேக் இன் அமெரிக்கா:ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் ராம்குமார் வரதராஜன் ரூ.240 கோடி முதலீட்டை அமெரிக்காவில் வட கரோலினா மாநிலத்தில் செய்யப் போகிற செய்தி ஏற்கனவே வந்தது.முதலில் குஜராத் அல்லது ஆந்திராவில் தான் முதலீடு செய்வதாக இருந்தாராம். ஆனால் வடகரோலினாவில் மின்சாரச் செலவினம் மொத்த இடுபொருள் செலவில் 4 சதவீதமே உள்ளதாம். ஆனால் இந்தியாவிலோ 15 சதவீதம் வரை ஆகிறதென்கிறார் ராம் குமார் வரதராஜன். (தி இந்து பிஸினஸ்லைன் 29.10.14) ஒரு யூனிட் மின்சாரத்திற்கு இங்கு ரூ.6.90 எனில் அங்கு ரூ.3 மட்டுமே. இங்கு தனியார் மின்சார வணிக நிறுவனங்களிடம் போனால் இன்னும் ஒரு ரூபாய் கூட ஆகிறது. இந்தியாவில் கோவிந்தராஜ் டெக்ஸ்டைல்ஸ் உற்பத்தியின் பெரும் பகுதி அருப்புக்கோட்டையிலேயே நடைபெறுகிறது. சீனாவுக்கு நுhல் ஏற்றுமதி செய்வதானால் துhத்துக்குடி துறைமுகத்திற்கு 100 கிமீ ,பின்னர் கொழும்பு-சிங்கப்பூர் வழியாக கப்பல் சீனா போய் சேர 31 நாட்கள் ஆகிறதாம். ஆனால் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு 20 நாட்களில் போய்விடுகிறது. அமெரிக்க உற்பத்தியில் 15 சதவீத செலவினம் குறைவு கிடைப்பதால் முதலீட்டை அங்கு கொண்டு செல்கிறார்.சேது சமுத்திரத்திற்கு முட்டுக் கட்டை , மின்சாரத்துறையில் அரசு முதலீடுகளுக்கு வெட்டு என வகுப்புவாதம் - நவீன தாராளமயத்தை இணைத்து குழைத்து அமலாக்குகிற மோடியால் கப்பல் போக்குவரத்து தாமதம், மின்சாரக் கட்டண உயர்வு ஆகிய பிரச்சனைகளை எப்படி தீர்க்க முடியும் !சத்தம்தான் பெரிதாக உள்ளது. சாதிப்பதற்கான திட்டம் எங்கே !
மேக் இன் சீனா:மோடியின்மேக் இன் இந்தியாமுழக்கம் தன்னை வெகுவாக ஈர்த்ததாக டாடா குழுமத்தின் சேர்மன் சைரஸ் மிஸ்ட்ரி அறிவித்த ஒரு மாதத்திற்குள்ளாக சுமார் ரூ.10,700 கோடி முதலீட்டை சீனாவில் செய்துள்ளார். அக்டோபர் 21, 2014 அன்று தனது முதல் hகுவார்லேண்ட் ரோவர் தொழிற்சாலையை டாட்டா சீனாவின் சாங்சு நகரில் திறந்துள்ளார்.இந்தியாவின் இறக்குமதிப்பட்டியலில் இல்லாத சீனப் பொருட்களே இல்லை என்பது தனிக்கதை. பெங்களூரு பட்டுப் புடவைகளுக்கான பட்டு நூல் தேவையில் 99 சதவீதம் சீனாவிலிருந்தே இறக்குமதியாகிறது.2013ல் இருதரப்பு வணிகத்தில் சீனாவிலிருந்து ரூ.3.06,000 கோடி இறக்குமதி ஆனதெனில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியானதோ ரூ.90,000 கோடிகள்தான். இந்தியா 159 சீனப் பொருட்கள் மீது இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி போட்டும்கூட இதுதான் நிலைமை.
மேக் இன் இந்தியா:இந்தியாவிற்கு முதலீடு வருகிறதோ இல்லையோ இங்கிருந்து சிவப்பாகவும், கறுப்பாகவும் பணம் வெளியேறிவிடுகிறது. உச்சநீதிமன்றம் கறுப்புப் பணப்பட்டியலை அளிக்காத மோடி அரசைக் கண்டித்து சொன்ன வார்த்தைகள் கடுமையானவை. “எங்களது முந்தைய ஆணையை நாங்கள் மாற்றமாட்டோம். அதில் ஒரு வரியைக்கூட மாற்றவோ திருத்தவோ மாட்டோம். அந்நிய நாடுகளிடமிருந்து நீங்கள் பெற்ற எல்லா விவரங்களையும் தரவேண்டும். விசாரணையின் அடுத்தக் கட்டத்தை நாங்கள் தீர்மானிப்போம். அந்நிய வங்கி கணக்குதாரர்களுக்கு ஏன் நீங்கள் பாதுகாப்பு குடை பிடிக்கிறீர்கள். அவர்கள் மீது நீங்கள் கரிசனம் காட்ட வேண்டாம். அதை சிறப்பு புலனாய்வுக்குழு பார்த்துக் கொள்ளட்டும். விசாரணை எதையும் நடத்துகிற சிரமம் உங்களுக்கு வேண்டாம். சிபிஐ விசாரணையா, வருமான வரி விசாரணையா, வேறு அமைப்பு மூலமாகவா என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம். கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருகிற வேலையை அரசாங்கத்திடம் விட நாங்கள் தயாராக இல்லை. அப்படிவிட்டால் அது எங்கள் வாழ்நாளுக்குள் நடக்கவே நடக்காது. எனவே நாங்களே செய்ய வேண்டியதை செய்கிறோம் !”வலிமையான பிரதமர் என வர்ணிக்கப் பட்ட தேர்தலுக்கு முந்தைய மோடிக்கும், இன்றைய மோடிக்கும் உள்ள வித்தியாச த்திற்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும் !
எச்சரிக்கை:இந்தியாவிற்குள் முதலீடுகள் வருமா? கறுப்புப் பணம் திரும்பி வருமா? என்று விவாதம் நடைபெறும் வேளையில்எபோலாஇறக்குமதி ஆகிவிடுமோ என்ற எச்சரிக்கையை பேராசிரியர் பீட்டர் பைலட் விடுத்துள்ளார். இவர் 1976ல் எபோலா வைரசைக் கண்டுபிடித்தவர்.“இந்தியாவின் அதிகமான மக்கள் தொகையும், பெரும் அடர்த்தியாக மக்கள் வாழ்கிற நகரங்களும் ஒரு சவாலை முன்வைக்கின்றன. எபோலா பாதிப்பு இங்கு வந்தால் நோயாளிகளை பிரிப்பதிலும், அவர்களுடனான தொடர்புகளை அடையாளம் காண்பிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கும். சுகாதார சீர்கேடுகளும் ஒரு முக்கிய பிரச்சனையாகும்மருத்துவம், சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடுகளில் வெட்டு. அரசுத் தலையிடாமை போன்ற பொருளாதாரப் பாதையே அமெரிக்க நாடுகளில்எபோலாபரவலுக்கு காரணம் என்பது விவாத அரங்குகளில் அதிகம் வெளிப்படுவதில்லை.விஞ்ஞானிகளின் முகங்களும், குரல்களும் ஊடகங்களின் கண்களுக்கும், காதுகளுக்கும் கவர்ச்சியாக இல்லையோ !

No comments: