Sunday 16 November 2014

பத்திரிகையின் பார்வையில் AIIEA-மனித சங்கிலி...

அன்பிற்கினியவர்களே!மதுரையில்நடைபெற்றFDI-க்கு  எதிரான போராட்டம் குறித்து  பத்திரிகை  யின் பார்வையில் AIIEA-மனித சங்கிலி... 
காப்பீடு சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மனிதச் சங்கிலி
காப்பீடு சட்ட திருத்த மசோதாவைக் கைவிட வலியுறுத்தி, மதுரையில் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.காப்பீடு துறையில் அன்னிய நேரடி முதலீடு வரம்பை உயர்த்தவும், பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களின் பங்குகளை விற்கவும் வகை செய்யும் காப்பீடு சட்ட திருத்த மசோதாவை கைவிடுமாறு, மத்திய அரசை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில், மதுரை பை-பாஸ் சாலையில் குரு திரையரங்கு முதல் காளவாசல் வரையில் இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் கோட்டத் தலைவர் ஜி. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அண்ணாத்துரை மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். இதில், மதுரை கோட்டத்தின் 6 மாவட்டங்களுக்கு உள்பட்ட எல்ஐசி, பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.-தினமணி.
மதுரை :அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்தும் மசோதாவை கைவிட வலியுறுத்தி இன்சூரன்ஸ் ஊழியர்கள்மதுரையில்குடும்பத்துடன்மனிதச்சங்கிலிபோராட்டத்தில்ஈடுபட்டனர். இன்சூரன்ஸ் கழக ஊழியர் சங்க கோட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். சி..டி.யூ., மாவட்ட செயலாளர் தெய்வராஜ் முன்னிலை வகித்தார்.எல்..சி.ஊழியர்,அதிகாரிகள்மற்றும்   பிற சங்க நிர்வாகிகள்   சூரியன், சந்திரசேகரன், சங்கரகிருஷ்ணன்,   ஜோசப் சுரேஷ் ராஜ்குமார், பரமசிவம், தவமணி, புஷ்பராஜன் பங்கேற்றனர். பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார் - தினமலர்  
இன்சூரன்ஸ் ஊழியர்கள் மனிதச்சங்கிலி போராட்டம்
இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீடு வரம்பை உயர்த்தக் கூடாது, பொதுத்துறை பொது நிறுவனங்களின் பங்குகளை விற்கக்கூடாது, அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்சூரன்ஸ் ஊழியர்கள் குடும்பத்துடன் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். மதுரை பைபாஸ் ரோடு முதல் காளவாசல் வரை நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு .சி..யூ. கோட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். சி..டி.யூ. மாவட்ட செயலாளர் தெய்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். முடிவில் .சி..யூ. பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். - தினத்தந்தி  
இன்சூரன்ஸ் மசோதாவை கைவிடுக!மதுரையில் மாபெரும் மனிதசங்கிலி
இன்சூரன்ஸ் மசோதாவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி இன்சூரன்ஸ் ஊழி யர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்டனர்.வருகிற நவ.24ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்சூரன்ஸ் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக உயர்த்த வழிவகை செய்யும் இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற இருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், இன்சூரன்ஸ் மசோ தாவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த இன் சூரன்ஸ் ஊழியர்கள் மதுரையில் சனிக் கிழமை தங்கள் குடும்பத்தினருடன் மனிதசங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை காளவாசல் அருகே நடை பெற்ற இப்போராட்டத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத்தலைவர் ஜி.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் இரா.தெய்வராஜ் முன்னிலை வகித்தார். மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை சிறப்புரையாற்றினார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சூரியன், எல்ஐசி ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் சி.சந்திரசேகரன், எல்ஐசி முதல் நிலை அதிகாரி கள் சங்க பொதுச்செயலாளர் எச்.சங்கர கிருஷ்ணன், என்எப்ஐஎப்டபிள்யூஐ பொதுச்செயலாளர் ஜே.ஜோசப் சுரேஷ்ராஜ்குமார், எல்ஐஏஎப்ஐ சங்க கோட்டத்தலைவர் ஆர்.பரமசிவம், லிகாய் பொதுச்செயலாளர் கே.தவமணி, பொதுஇன் சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எம்.புஷ்பராஜன் ஆகியோர் பேசினர். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டப் பொதுச்செயலாளர் நா.சுரேஷ்குமார் நன்றி கூறினார். இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் மதுரை நகரைச் சேர்ந்த பல்வேறு சங்கங் களின் தலைவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர் - தீக்கதிர்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா