Wednesday 19 November 2014

இரட்டை தியாகிகள் மாரி, மணவாளனின் 65 வது நினைவுநாள்

இரட்டை தியாகிகள் மாரி, மணவாளனின் 65 வது நினைவுநாள் நிகழ்ச்சி மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்நவம்பர் 19 -ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டு நரவேட்டையாடப்பட்டனர். மதுரையில் ஏராளமானோர் காவல்துறையின் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். மதுரை பீபீ குளம் பகுதியில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மாரி, மணவாளன் ஆகியோரை காங்கிரஸ் ஆட்சியின் தூண்டுலின் பேரில் காவல்துறை சுட்டுக் கொன்றது. மதுரை மண்ணில் சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டை தியாகிகள் மாரி, மணவாளனின் நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.மதுரையில் புதனன்று மாலை 6 மணியளவில் நடைபெறும் மாரி,மணவாளனின் 65 - வது நினைவு நாள் நிகழ்ச்சியில் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் பா.விக்ரமன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.அண்ணாதுரை எம்.எல்.., இரா.ஜோதிராம், பகுதிக்குழுச் செயலாளர் பி.ராதா, மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜெயச்சந்திரன், இரா.மணிமேகலை உள்ளிட்ட பலர்கலந்து கொள்கின்றனர். பகுதிக்குழுக்கள் சார்பிலும் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.தியாகிகளுக்கு நமது அஞ்சலியையும் இணைக்கின்றோம்.

No comments: