Tuesday 18 November 2014

நவ-27,நாடு தழுவிய போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்...

அருமைத் தோழர்களே! ஆண்டுக்கணக்காய் நியாயமான நமது கோரிக்கைகளை தீர்க்க 3 கட்ட போராட்டங்கள் நடத்திய பின்னும், தீர்க்க மறுக்கும் மத்திய அரசு மற்றும் BSNL நிறுவனத்தின் ஆணவ போக்கை அகற்றிட, முத்தான 30 அம்ச கோரிக்கைகளை வென்றிட, நம்மில் சங்கங்கள் வேறுபட்டிருந்தாலும்,ஒற்றுமை பதாகையை ஒன்றாக  உயர்த்திப் பிடித்து    நவ-27, நாடு தழுவிய வேலை நிறுத்தப்  போராட் டத்தை வெற்றிகரமாக்குவோம்... 
முத்தான 30 அம்ச கோரிக்கைகள் 
Ø  ஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை தீர்த்தல்.
Ø  01/01/2007க்குப்பின் பணியமர்ந்தவர்களின் ஊதிய முரண்பாடு களைதல்.
Ø  புதிய போனஸ் கணக்கீடு உருவாக்குதல்.
Ø  நாலுகட்டப்பதவி உயர்வில் SR.TOA தோழர்களின் குறைகளை நீக்குதல்.
Ø  கருணை அடிப்படை பணி நியமனத்தில் விதிகளை தளர்த்துதல்.
Ø  LTC,மருத்துவப்படி,விடுப்பைக்காசாக்கல் ஆகியவற்றை மீண்டும் பெறுதல்.
Ø  பதவி உயர்வில் அதிகாரிகளுக்கான  E1 சம்பள விகிதம் பெறுதல்.
Ø  பதவிகளுக்கான உரிய பெயர் மாற்றம் செய்தல்.
Ø  JTO பதவிகளில் தற்காலிக பதவி வகிக்கும் TTA தோழர்களை நிரந்தரப்படுத்துதல்.
Ø  BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளித்தல்.
Ø  இலாக்கா தேர்வுகளில் SC/ST  தோழர்களுக்கான மதிப்பெண்களில் தளர்வு.
Ø  JTO  மற்றும் JAO தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்தல்.
Ø  புதிதாக ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் நியமனம் செய்தல்.
Ø  விடுபட்ட மஸ்தூர் தோழர்களை நிரந்தரம் செய்தல்.
Ø  ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்,EPF,ESI வசதி வழங்குதல்.
Ø  MANAGEMENT TRAINEE தேர்வெழுத ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்.
Ø  TM பயிற்சி முடித்து நிரந்தரம் ஆகாதவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல்.
Ø  மஸ்தூர் தோழர்களுக்கு IDA சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்குதல்.
Ø  SC/ST  நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்புதல்.நவ 
Ø  SR.TOA, DRIVER, மற்றும் TM பதவிகளின் சம்பள விகிதங்களை உயர்த்துதல்.
Ø  DOT காலத்தில் பயிற்சிக்கு சென்று BSNLலில் பணி நியமனம் பெற்றவர்களை   DOT ஊழியராக கருதுதல்.
Ø  01/10/2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 01/10/2000க்குப்பின் Inct பெற விருப்பம் கொடுக்க அனுமதித்தல்.
Ø  ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 IDA இணைப்பை வழங்குதல்.
Ø  முதலாம் ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைதல்.
Ø  TELECOM FACTORYகளை மறு சீரமைத்தல்.
Ø  JTO/JAO/TTA/TM தேர்வெழுதுவதற்கான தகுதிகளை தளர்த்துதல்.
Ø  01/01/2007ல் இருந்து 78.2 IDA நிலுவை வழங்குதல்.
Ø  அனைத்து விதமான படிகளையும்  உயர்த்தி வழங்குதல்.
Ø  அழைப்பு மையங்களில் CALL CENTERகளில் BSNL ஊழியர்களை பணியமர்த்துதல்.
Ø  அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM  வழங்குதல்.
போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: