Friday 3 October 2014

காதல் திருமணம் செய்த இளம்பெண் கவுரவக் கொலை!

மதுரைகாதல் திருமணம் செய்து கொண்ட பெற்ற மகளையே பெற்றோரே கவுரவக் கொலை செய்த பயங்கர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த போலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தீலிப்குமார். இவர் அருகில் உள்ள சேம்பர் கிராமத்தை சேர்ந்த விமலா (வயது 19) என்ற பெண் காதலித்து வந்துள்ளார். இவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.இந்நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி கேரளாவில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, மகளை காணவில்லை என்று விமலாவின் தந்தை வீரண்ணன் உசிலம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காதலர்களை தேடி வந்தனர். இந்நிலையில், காதலர்கள் கேரளாவில் இருப்பதை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று அவர்களை அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து, இருவரையும் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, வயதை காரணம் காட்டி இருவரையும் பிரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, விமலா அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இதனிடையே, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி விமலாவுக்கும், தேனியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதுஇதைத் தொடர்ந்து, காதல் கணவர் தீலிப்குமாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு துணி எடுப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சதீஷூடன், விமலா தேனிக்கு வந்துள்ளார். அப்போது, தீலிப்குமாருடன் எனக்கு திருமணம் நடந்து விட்டதாகவும், இதனால் என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் விமலா, சதீஷிடம் கூறியுள்ளார். அப்போது, சதீஷ் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் தீலிப்குமாருக்கும், சதீஷூக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.த்தரவிட்டுள்ளார். இது குறித்து சதீஷ், விமலாவின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு விமலாவை பெற்றோர், உறவினர்கள் அடித்து கொன்றதோடு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.

பின்னர் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.இதனிடையே, காதல் மனைவி விமலா எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தீலிப்குமாருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரியிடம் இன்று புகார் அளித்துள்ளார். அதில், தனது காதல் மனைவியை பெற்றோர் கவுரவக் கொலை செய்துவிட்டதாகவும், இதற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டி.எஸ்.பி குமாரவேலுவுக்கு எஸ்.பி. பிதாரி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, டி.எஸ்.பி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்.காதல் திருமணம் செய்து கொண்ட மகளை பெற்றோரே கவுரவக் கொலை செய்த சம்பவம் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப் பிரச்சனையில்  நியாயம் கோரி , தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  தலைவர்கள்  காவல்துறையில் ஆட்சேபனை எழுப்பி உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது..

No comments: