Friday 3 October 2014

ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்களின் சாதனைகள் . . .

ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா.. 
பாகிஸ்தானை வீழ்த்தி 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு ஹாக்கியில் தங்கம் வென்ற இந்திய அணியினரின் கொண்டாட்டம்ஆசிய விளையாட்டில் 16 ஆண்டுகளுக்குப்பின் தங்கப்பதக்கம் வென்றது. கடைசியாக 1998ல் பாங்காங்கில் நடந்த போட்டியில் தங்கம் வென்றது.இதன் மூலம் வரும் 2016ல் ரியோ டி ஜெனிரோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட நேரடியாக தகுதி பெற்றது. .........
இந்திய வீராங்கனைகள் தங்கம்: தொடர் ஓட்டத்தில் சாதனை....
ஆசிய விளையாட்டில் தொடர்ந்து நான்காவது முறையாக (2002, 2006, 2010, 2014) 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று அசத்தியது. தவிர, ஆசிய விளையாட்டில் சிறந்த நேரத்தை பதிவு செய்தது சாதனை படைத்தது. கடந்த 2010ல் தங்கம் வென்ற இந்திய அணி பந்தய துாரத்தை மூன்று நிமிடம்,3 நிமிடம் 29.02 வினாடிகளில் கடந்தது. அடுத்த இரண்டு இடங்களை ஜப்பான், சீன அணிகள் பிடித்தன. 
தங்கம் வென்றது இந்திய பெண்கள் கபடி... 
இந்திய பெண்கள் அணி 31–21 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. கடந்த 2010 ஆசிய விளையாட்டினை தொடர்ந்து இரண்டாவது முறையாக, இந்திய பெண்கள் கபடி அணி, தங்கம் வென்றது
 --- நமது உளப்பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,எஸ்.சூரியன் -D/S-BSNLEU.


No comments: