Friday 10 October 2014

ஹரியானா தேர்தல் -வேட்பாளர்களில் 94 பேர் மீது கிரிமினல்

ஹரியானா மாநிலத்தில் சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 94 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. ஹரியானா மாநிலத்தில் வரும் 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் 1,351 வேட்பாளர்களில் 94 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. இது மொத்த வேட்பாளர்களில் 9 சதவிகிதம் ஆகும்.இதில் ஹரியானா ஜன்ஹிட் காங்கிரஸ் வேட்பாளர்கள் தான் அதிக அளவு கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். இந்த கட்சியின் 65 வேட்பாளர் களில் 10 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் 88 வேட்பாளர்களில் 10 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இதில் 6 பேர் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டு உள்ளது.பாரதிய ஜனதா மொத்தம் உள்ள 90 தொகுதி யிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இவர்களில் 9 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.அதில் 4 பேர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளது.காங்கிரசின் 90 வேட்பாளர்களில் 4 பேர் மீது மட்டுமே கிரிமினல் வழக்கு உள்ளது. 4 பேர் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளது. 597 சுயேட்சை வேட்பாளர்களில் 41 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள். இதில் 31 பேர் மிக கடுமையாக குற்றம் சாட்டப்பட்டவர்கள்.வழக்கு விசாரணையை சந்தித்து வரும் 94 பேரில் 70 பேர் கொலை, கொலை முயற்சி, பாலியல்பலாத்காரம் வன்முறையில் ஈடுபடுவது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளவர்கள் என்ற தகவலை மாநில போலீசாரின் குற்ற ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: