Tuesday 2 September 2014

Observe International Day of Action on 3rd October.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மூன்றாம் தேதியை செயல்பாட்டிற்கான சர்வதேச தினமாக - தொழிற்சங்கங்களின் உலகக் கூட்டமைப்பு (WFTU) அனுசரித்து வருகிறது. இவ்வாண்டும் அக்டோபர் 3வேலையிண்மையை மையப்படுத்தியசெயல்பாட்டிற்கான சர்வதேச தினமாகஅனுசரிக்க அறைகூவல் விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பலகோடி இளைஞர்கள் வேலைதேடி அலைபவர்களாக இருக்கிறார்கள். இது உழைக்கும் வர்க்கத்துடன் தொடர்புடையது. 2008ல் தொடங்கிய உலக நிதி நெருக்கடி பலகோடித் தொழிலாளர்களின் வேலையைப் பறித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பியது. வேலைபறிக்கப்பட்ட தொழிலாளர்களைக் காக்க எந்த முயற்சியும் எடுக்காமல் நட்டாற்றில்விட்ட உலகின் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் நிதி நெருக்கடியில் இருந்து முதலாளிகளை மீட்டெடுப்பதற்காக கோடிகோடியாய் நிதி ஒதுக்குகிறன.
1945 அக்டோபர் 3ல் தொடங்கப்பெற்று 105 நாடுகளைச் சேர்ந்த 210 தொழிற்சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட WFTUவில் நமது BSNLEU சங்கமும் உறுப்பினராக உள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்ற நமது சங்கத்தின் மத்திய செயற்குழு செயல்பாட்டிற்கான சர்வதேச தினத்தை வேலையின்மைக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் அனுசரிக்க முடிவு செய்தது. மத்திய சங்கம் மற்றும் கூட்டமைப்பின் முடிவுகளை செயல்படுத்த வேண்டியது நமது கடமை.

No comments: