Monday 1 September 2014

செய்தி . . . துளிகள் . . .

  • IDA எதிர்பார்ப்பு    01-10-2014 முதல் IDA உயர்வு 6.9 முதல் 7.4 % வரை  இருக்கலாம்  என எதிர்பார்க்கப்படுகிறதுஜூலை மாதத்தில்  விலைவாசிப்புள்ளி 6 சதம் உயர்ந்துள்ளது. எனவே அக்டோபர் மாத IDA குறைந்தபட்சம் 6.6 சதம் உயர்வதற்கான வாய்ப்புள்ளது
  • EPF வட்டி விகிதம் 8.75 சத அடிப்படையிலேயே தொடருகின்றது.  மிக நீண்ட போராட்டத்திற்குப்பின்... EPF திட்டத்தில் உறுப்பினர்களாக இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு  குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.1000/= என அரசு உத்திரவிட்டுள்ளது. மாத ஊதிய வரம்புத்தகுதி 6500ல் இருந்து  15000/= எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • BSNL உதயம் ஆன 01/10/2000 முதல்  30/06/2001 வரை ஓய்வு பெற்ற தோழர்களுக்கு கடைசி பத்து மாதம் முழுமையாக IDA சம்பளத்தில் இல்லாததால் ஓய்வூதியத்தில் குறைவு ஏற்பட்டது. இதில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை  01/09/2014க்குள் அனுப்புமாறு BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களைக்  கேட்டுக்கொண்டுள்ளது.
  • DELOITTE குழு அறிக்கையின் மீதான கருத்துக்களை 10/09/2014க்குள் தலைமையகத்திற்கு அனுப்புமாறு மாநில CGMகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

No comments: