Monday 1 September 2014

நீதிபதி பி.சதாசிவம் கேரள மாநிலத்தின் கவர்னராக நியமனம்.

தமிழ்நாட்டுக்காரர்... கேரள கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கும் 65 வயதான நீதிபதி பி.சதாசிவம், கடந்த 1949-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடப்பநல்லூரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் பழனிச்சாமி கவுண்டர், தாயார் பெயர் நாச்சாயம்மாள்.
சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியான தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட மாநில கவர்னர்கள் நீக்கப்பட்டு புதிய கவர்னர்கள் நியமிக்கப் பட்டு வருகின்றனர். அந்தவகையில் கேரள கவர்னரான ஷீலா தீட்சித் கடந்த செவ்வாய்கிழமையன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்றைய தினமே ராஜஸ்தான், மராட்டியம், கர்நாடகம், கோவா ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில், கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நேற்று நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் கேரள கவர்னராக பதவி ஏற்க இருக்கிறார்.

No comments: