Sunday 17 August 2014

மக்களின் உரிமை,தேச ஒற்றுமையையும் பாதுகாப்போம்.

CPI(M) மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சியின் முதுபெரும் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் தோழர். என்.சங்கரய்யா, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த லட்சக்கணக்கான வீரர்களுக்கு ஆழ்ந்த புகழஞ்சலியைசெலுத்துகிறோம் விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு மகத்தானது. 1947 ஆக.15 சுதந்திரத்திற்கு முந்தையநாளன்றுமாலை400கம்யூனிஸ்ட்டு கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் சிறையில்  இருந்து .எம்.எஸ்.நம்பூதிரிபாட்,  எம்.ஆர்.வெங்கட் ராமன், மதுரை சிறையில் இருந்து பி.ராமமூர்த்திகே.டி.கேதங்கமணி, என்னைப்போன்றோரும் விடுதலை செய்யப் பட்டனர். அந்த தியாகிகள் விட்டுச் சென்ற பணியை நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சாதி,மதம் கடந்த ஒன்றுபட்ட போராட்டத்தால்தான் விடுதலை பெற்றோம். அந்த பாரம் பரியத்தை மனதில் நிறுத்தி குடும் பத்தில் உள்ள பெண்கள் உட்பட அனை வருக்கும் கம்யூனிச சிந்தாந்தத்தை பயிற்றுவிப்போம்.மக்களோடு, குடும்பங்களையும் திரட்டுவோம்.நாட்டின் விடுதலையை பாதிக்கும் வகையில், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 2 மாதங்களில் 600க்கும் அதிகமான மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளதாக அரசே தெரிவிக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக வகுப்புவாதத்தை தூண்டி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அந்தக் கட்சியின் தலைவர் அமித்ஷா-வை கொண்டாடுகின்றனர்.இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்தம், பார்சி, சமண மக்கள் வசிக்கும் இந்தியாவை இந்துகளின் நாடு என்பது அபத்தமானது. இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாக்க, வகுப்பு வாதத்தை முறியடிக்க இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஒற்றி ணைந்து போராட வேண்டும். மதக்கலவரங்களை தடுப்போம்; அனைத்து மதமக்களின் உரிமைகளையும், தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்போம்.சாதிச் சண்டைகளை தடுப்பதில் இடதுசாரிகள் முன்னிற்போம்.பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு அடகு வைக்க, பொருளதார சீர்திருத்தம் என்ற பெயரில், அரசுரிமைகளையும், சுதேசி தொழில்களையும் பாதிக்கும் வகையில் பாஜக அரசு சட்டங்களை திருத்த முயற்சிக்கிறது. இதற்கெதிராக அனைத்து தரப்பு மக்களும் போராட வேண்டும். காப்பீட்டுத் துறையில் 49விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதா, கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பால் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் உள்ளது.வேலூரில் பாலாற்றை பாதுகாக்க சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது. எதிர்காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளின் முன்னோடி அது. ஆக.25-31 வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்க உள்ளது. செப்.1 அன்று மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இந்த இயக்கம் தமிழக அரசியலில் ஒரு புது சக்தியை உருவாக்கும். எந்தவொரு நாசகர, பிற்போக்கு, சித்தாந் தத்தையும் எதிர்க்கும் சக்திகம்யூனிஸ்டுகளுக்கு உண்டு.காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உருவாக்கிய மார்க்சியம் வெற்றி பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவில் இடதுசாரி திருப்பத்தை கொண்டு வருவோம்; போராடுவோம். கட்சி அறிவித்துள்ள அடுத்தடுத்த இயக்கங்களில் பங்கேற்போம்.(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு அலுவலகத்தில் 68வது சுந்திர தினக் கொடியை ஏற்றி வைத்து என்.சங்கரய்யா பேசியதிலிருந்து
மதுரை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சுதந்திர தினவிழா, சுதந்திரப் போராட்ட வீரர் ஆர்.உமாநாத் படம் திறப்பு, தீக்கதிர் சந்தா வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்ளியன்று நடைபெற்றது.கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.ஜோதிராம் தலைமை வகித்தார். தோழர் ஆர்.உமாநாத் படத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.நன்மாறன் திறந்து வைத்து உரையாற்றினார். ஒரே வார்டில் சாதனை : விழாவில் 368 தீக்கதிர் சந்தாவிற்கான தொகை 3 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரூபாயைமாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமனிடம்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராதா வழங் கினார்.மதுரை கிளைத்தோழர்களின் முயற்சிகளுக்கு விழாவில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. விழாவில் கட்சியின் மாவட்ட செயலாளர் பா.விக்ரமன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். --தீக்கதிர் 

No comments: