Wednesday 6 August 2014

ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா தினம் - அணுகுண்டால் சாம்பலான.


1945 ஆகஸ்ட் ஆறு, யாமகுச்சி, ஹிரோஷிமாவின் மிட்சுபுட்சி நிறுவன பொறியாளர் காலை வேலைக்கு கிளம்பி அமெரிக்க அணுகுண்டு வீச்சில் சிக்கினார். யாமகுச்சியின் ஊர் ஹிரோஷிமா அல்ல. குற்றுயிரும் கொலையு யிருமாக நகரம் செத்துக் கொண்டி ருந்தபோது ஓடிய ஒரே ரயிலில் ஏறி தன் சொந்த ஊருக்கு ரத்தம் சொட்டச் சொட்ட போய் இறங்கினார். அவரது சொந்த ஊர் எது தெரியுமாநாகசாகிமறுநாள் உள்ளூரிலிருந்த மிட்சுபுட்சி அலுவலகம் செல்லும் வழியில் அதேபோல மீண்டும்புகைக்காளான்‘, இரண்டையும் அனுபவித்து வாழ்க்கையில் தப்புவிக்கப்பட்ட ஒரே மனிதரானார்.2008ம் ஆண்டு இன்டிபெண்டண்ட் இதழின் பத்திரிகையாளர் டேவிட் மெக் நீல், நாகசாகியின் உள்ளூர் இதழாளர் மாசானி மியாஷிடாவின் உதவியோடு அவரது ஒரே நேர்காணலை எடுத்தாலும் ஓராண்டு கழித்தே அது வெளிவந்தது.பொறியியல் மட்டுமின்றி அணுவியல் மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் கொடிய தாக்குதல்கள் அனைத்தையும் ஆய்ந்தறிந்து தன் சொந்த அனுபவத்தின் பெயரில் தொடர்ந்து பகிர்ந்த யாமகுச்சி, அணுவியலின் ஆபத்தான அரசியலின் தீவிர எதிர்ப்பாளராக தான் இறந்து போகும் (2000) வரை இருந்தார்.அரசியல் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் தனது அணுகுண்டு அனுபவங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்து கொள்ளும் யாமகுச்சி சொல்லும் பல தகவல்கள் இதுவரை பதிவு செய்யப்படாதவை; கொடுமை நிறைந்தவை; மனதை உலுக்கும் உண்மைகளாக இருப்பதையும் காணலாம்.நான் மிட்சுபுட்சி நிறுவனத்திற்கு (ஐந்து டன்) எண்ணெய்க் கப்பல் கட்டுமானத்திற்கு வரைபடங்கள் தயாரித்து அப்போது முடித்திருந்தேன். அதை அன்று அதாவது 1945 ஆகஸ்ட் ஆறு காலை ஒப்படைத்துவிட்டால்போதும், பணியிலிருந்து விடுவித்து கொண்டு என் ஊருக்குச் சென்றுவிடலாம். என் மனைவி குழந்தைகள் அங்கே பல மாதங்களாக என்னை பிரிந்திருக் கிறார்கள்.அன்றைக்கு என் அசைன்மெண்ட் முடிவதாக இருந்தது. ஏழு மைல் தள்ளியிருந்த என் தங்குமிடத்திலிருந்து காலையில் கிளம்பும்போது மணி ஏழிருக்கும். ஏற்கெனவே காலதாமதமாகி இருந்தது. நான் என் அடையாள அட்டையை மறந்து பாதிவழியிலிறங்கி திரும்பிச்சென்று எடுத்துக்கொண்டு போக நேர்ந்தது. யுத்த காலத்தில் ஜப்பானில் நிறுவன அடையாள அட்டை இல்லாமல் உள்ளே விடமாட்டார்கள். ஆனால் வழியிலேயே வானில் பி-29 அமெரிக்க போர் விமானத்தைப் பார்த்துவிட்டேன். அதிலிருந்து கரு நிற குண்டுகள் வழக்கமாக விழும் என்பதால் நான் உடனே உருளைக்கிழங்கு வயலின் புதரில் குப்புறப்படுத்தேன். ஆனால் பெரும் வெடியோ சத்தமோ எதுவும் இல்லை. இதுவானில் மெல்ல சிதறி சில துண்டுகளாகச் சிதறிக்கொண்டிருந்தது. ஆனால் அதிகரித்த போது சூரியன் சட்டென இருட்டானது.ஆனால் உடல் காற்றில் வெப்பத்தில் தகித்து நான் தூக்கியெறியப்பட்டிருந்தேன். பல மணிநேரம் கழித்து எனக்கு நினைவு திரும்பியபோது ஒரு பிணக்குவியலின் மத்தியில் இருந்தேன்.ஹிரோஷிமா மீது வீசப்பட்டது ஒரு யுரேனியம் அணுகுண்டு. ஆகஸ்ட் ஒன்பது நாகசாகியில் வீசப்பட்டதுஒரு புளுட்டோனியம் அணுகுண்டு. முதலில் இந்த வேற்றுமை கூட சரியாக பதிவு செய்து அறிவிக்கப்படவில்லை. அடுத்து வரும் ஆண்டுகளில் எஞ்சியவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு இது எவ்வளவு? பெரிய பங்கு வகித்திருக்கும் என்பது தெரிந்தும் மறைக்கப்பட்டது.ஹிரோஷிமா குண்டுக்கு அவர்கள் லிட்டில் பாய் என்று பெயர் வைத்திருந்தார்கள். எங்கள் கணக்குப்படி 1,35,000 பேர் சில நிமிடங்களில் கொல்லப்பட்டார்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு மதியம் மிட்சுபுட்சி அலுவலகத்தை அடைந்தபோது அது சாம்பலாகி இருந்ததும் அங்கே மனித உயிர் ஒன்று கூட மிச்சமில்லாததையும் கண்டு நான் துடித்தேன். எனது இடது கை முற்றிலும் செயலிழந்து கழுத்து உணர்வற்றுவிட்டது.சிலர் வீதிகளில் தென்பட்டார்கள். யாரும் பேசிக்கொள்ளவில்லை. அடுத்த பல வருடங்கள் நான் முன்புபோல பேசவே வாயெடுத்தது இல்லை. ஒரு நூடுல்ஸ் வண்டிக்காரர் காரித்துப்பியபோது ரத்த நிறத்தில் அவரது நாக்கு விழுந்ததை நேரடியாகப் பார்த்தேன். நான் ஊருக்கு ஓடிவிட துடித்தேன். ஆனால் என்னைவிட உயிருக்கே போராடுகிறவர்களை மீட்க எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சுற்றிலும் எரிந்து ஜூவாலை விட்ட கட்டிடங்களின் வெளிச்சத்தில் ஹிரோஷிமாவின் ஒரே மருத்துவமனை மூன்று டாக்டர்கள் ஏழு நர்சுகள் இருந்தார்கள். (ஆறு டாக்டர்கள் இறந்து தூளாகியிருந்தார்கள்) பத்தாயிரம் பேர் இருக்கும். இங்கும் அங்கும் ஆஸ்பத்திரி தேடி ஓடிய பலர் அங்காங்கே இறந்து விழுகிறார்கள். நான் ஆறுக்கு ஓடினேன்.பாலம் நொறுங்கிவிட்டிருந்தது. ஆற்றைக்கடந்தால் ரயில் நிலையம் ஒருரயில் கண்டிப்பாக தெற்கு நோக்கி ஓடுவதாய் எனக்கு மருத்துவர் சொல்லியிருந்தார். நேரடியாக தண்ணீரில் குதித்தபோது அது பிணங்களின்மொத்த சகதியாக இருந்தது. அப்போது அந்த கருப்பு மழை தொடங்கிவிட்டிருந்தது. அது முழுவதும் கதிர்வீச்சு கொண்டதாக மீதி இருந்தவர்களை அழித்துவிடும் அமிலத்தன்மை கொண்டதாக இருந்தது. ரயிலில் பலர் இறந்தே கிடந்தார்கள். ஆனால் அதற்கு அன்று சீட்டும் வாங்கவில்லை. அது கிளம்பியது. வழியில் எல்லாம் நான் கதறி கதறி அழுவதைத் தவிரவேறு ஏதும் செய்யவில்லை.நான் பவுத்த மதம் சார்ந்தவன். கடவுள் நம்பிக்கை எனக்குக் கிடையாது. என் மனம் இன்று வரை வாழ வேண்டும் எனும் வேட்கையைக் கைவிட்டது கிடையாது. இதுவரை 42 முறை எனக்கு கண்புரை ஏற்பட்டு கேட்டராக்ட் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. என் ரத்த நாளங்களிலிருந்து அணுக்கதிர் வீச்சு முழுமையாக விலகவில்லை.என் குழந்தைகளுக்கும் அதே நிலை. ஆனால் உலகம் பாடம் கற்கவில்லை என்றே தோன்றுகிறது. 1945லிருந்து இருபது நிமிடத்திற்கு ஒரு முறை ஹிரோஷிமா மீது தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்திருந்தால் எவ்வளவு குண்டுகள் வீசப்பட்டிருக்குமோ அவ்வளவு குண்டுகள் இன்று உலகெங்கும் உள்ளது என்றால் அதன் அர்த்தம் என்ன? அணு உலைகள், கதிர்வீச்சு விவசாயம் என இவர்கள் மனித பேரழிவு அறிவியலோடு அரசுகளின் முழு ஆதரவோடு இயங்குகிறார்கள். அமைதிக்கான அறிவியலை நாம் முன் வைக்க வேண்டும்.-----தீக்கதிர் 

No comments: