Friday 29 August 2014

ரயில்வேயில் 100 %அந்நியர் BJP அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரயில்வே துறையில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீடு, சில துறைகளில் முழுமையாகவும் விரைவாகவும் அனுமதிக்கப்படும் என மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் வியாழனன்று தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சித்துறையினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:ரயில்வேத் துறையில் 100விழுக்காடு அந்நிய நேரடி முதலீடு விரைவான வழிமுறைகளில் சில துறைகளில் முழுமையாக அனுமதிக்கப் படுகிறது.அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள துறைகளில் அதிவிரைவு ரயில் போக்குவரத்து அமைப்புகள், ரயில் பெட்டிகள் தயாரிப்பும் பராமரிப்பு வசதிகளும், ரயில்வே மின்சாரமயமாக்குதல், சிக்னல் முறைகள், சரக்கு நிறுத்தங்கள் பயணிகள் நிறுத்தங்கள், தொழில் பூங்காக்களிலுள்ள கட்டுமானங்கள் போன்றவை அடங்கும்
ரயில் இயங்குதலிலும் பாதுகாப்பிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை தாராளமயமாக்கிவிட்டோம். இதை பயன்படுத்திக் கொண்டு முதலீடுகளை கவர்ந்திழுப்பது ரயில்வேத் துறையின் கரங்களில்தான் உள்ளது. ரயில்வே துறையின் பட்ஜெட்டில் பற்றாக்குறையாக உள்ள 29,000 கோடி நிதி தேவைப்படுகிறது.இவ்வாறு தொழில்கொள்கை மற்றும் வளர்ச்சித் துறையின் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

No comments: