Thursday 24 July 2014

நமது BSNLEU மத்திய சங்கத்திலிருந்து முக்கிய செய்திகள் . . .

 "GPF" என்ற இந்த சொல் இன்று அதிகம் பேசக்கூடிய சொல்லாகிவிட்டது . இது வருமா ! வராதா ! வந்தால் எத்தனை சதவிகிதம் .இது விசயமாக நேற்று நமது CMD அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுடன் மூத்த பொது மேலாளர் (BFCI) அவர்களை இன்று (23-07-2014) சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது  GPF payment தாமதம் ஆவதற்கு கார்போரேட் அலுவலகத்தில் பணமே இல்லையாம் (NIL Balance). வரும்  வெள்ளிகிழமைக்குள் நிதி சேர்ந்தால் போதிய ஒதுக்கீடு செய்யப்படுமாம் . அது சாத்தியம் இல்லை என்றால் வரும்  சம்பளத்திற்கான   நிதி ஒதுக்கீட்டுடன்  "GPF" க்கும்   சேர்ந்து நிதி ஒதுக்கீடு வரும்  என அவர் கூறியுள்ளார் .
புதிய போனஸ் வரையறை 
புதிய போனஸ் கணக்கீட்டை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட போனஸ் குழுக்கூட்டம் 23/07/2014 அன்று டெல்லியில்  நடைபெற்றது. நமது பொதுச் செயலர்.தோழர்.பி .அபிமன்யு கலந்து கொண்டார். இலாபத்துடன் இணைந்த போனஸ் என்பது இல்லாமல் உற்பத்தியுடன் இணைந்த போனஸ் என்ற நமது கோரிக்கையின் அடிப்படையில் நிர்வாகம் தனது குறிப்பை  அளித்துள்ளது.
புதிய தரைவழி தொலைபேசி இணைப்புக்களை கொடுப்பது..தரைவழி இணைப்புக்களை தக்கவைப்பது..
புதிய அகன்ற அலைவரிசை BB   இணைப்புக்களை கொடுப்பது..அகன்ற அலைவரிசை BB   இணைப்புக்களை தக்கவைப்பது..WIMAX மற்றும் CDMA இணைப்புக்களை கொடுப்பது என்ற மேற்கண்ட பணிகளுக்காக 
55 மதிப்பெண்கள் நிர்ணயிக்கபட்டுள்ளது.
தரைவழி,அகன்ற அலைவரிசை இணைப்புக்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுப்பது..
தரைவழி,அகன்ற அலைவரிசை பழுதுகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றுவது..
போன்ற பணிகளுக்காக 35 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CM எனப்படும் CONSUMER MOBILITY கம்பியில்லா தொலைபேசி பகுதிக்கு 10 மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளது.
விற்பனைப்பிரிவு, புதிய சேவைப்பிரிவு, வணிகப்பிரிவு போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
மொத்தத்தில்...
பழுதுகளை உடனே அகற்றுதல்...இணைப்புக்களை உடனே கொடுத்தல்..என்ற பணிகளை மட்டும் நாம் செவ்வனே செய்தால் போனஸ் கிட்டும்.. என்பது நிர்வாகத்தின் தற்போதைய நிலைபாடு...நமது நிலைபாடு என்ன? என்பது பற்றி நமது மத்திய சங்கம் கருத்து கோரியுள்ளது.

1 comment: