Friday 11 July 2014

மக்கள்விரோத கொள்கைகளை தீவிரப்படுத்தும் BJPபட்ஜெட்.

பா... அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் காங்கிரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை தீவிரப்படுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், ''மத்திய பா.. அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட் பல அபாயகரமான அம்சங்களைக் கொண்டுள்ளது. ஏற்கனவே ரயில்வே பயணிகள் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணத்தை உயர்த்தி சாதாரண மக்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்த பா... அரசு கேந்திரமான ரயில்வே துறையில் அன்னிய நேரடி மூலதனத்தை அனுமதிக்கப் போவதாக அறிவித்தது. தற்போது பொது பட்ஜெட்டில் அன்னிய மூலதனத்தை பரவலாக அனுமதிப்பதை தனது கொள்கையாக பிரகடனம் செய்துள்ளது. பாதுகாப்புத் துறையில் 49 சதவிகிதம், இன்சூரன்ஸ் துறையில் 49 சதவிகிதம் அன்னிய மூலதனத்தை அனுமதிக்கப் போவதாகஅறிவித்துள்ளமத்தியஅரசுஇன்னும்பல்வேறுகேந்திரமானதுறைகளிலும்அந்நியநேரடிமூலதனம்அனுமதிக்கப்படும்எனதெரிவித்துள்ளது.மேலும் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் தரக்கூடிய உணவு மற்றும் எரிபொருள் மானியம் குறித்து மறுபரிசீலனை செய்யப் போவதாகவும் ஒட்டுமொத்த மானியங்களையும் ஒழுங்குபடுத்தப் போவதாகவும் கூறியுள்ளது. புதிய உரக் கொள்கையை வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளது. அரசின் வருமானத்தை மீறி செலவிட முடியாது என தெரிவித்துள்ளதன் மூலம் மேலும் பல தாக்குதல்களை சந்திக்க மக்கள் தயாராக இருக்கும்படி சொல்லாமல் சொல்லியுள்ளதுபா...அரசு.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் மக்கள் நலனை புறக்கணித்து கடந்த 10 ஆண்டுகளில் கடைப்பிடித்த அந்நிய முதலாளிகளுக்கு வாரி வழங்கும் அதே கொள்கைகளை அச்சரம் பிசகாமல் அதேசமயம் தீவிரமாக அமல்படுத்த முனைந்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாய நெருக்கடி, தொழில் மந்தம் ஆகியவை கடந்த 10 ஆண்டுகள் அனுபவமாக இருந்தது. இந்த வாழ்வாதாரப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு எந்த உருப்படியான திட்டங்களும் இல்லாததோடு இந்தப் பிரச்னைகளை தீவிரப்படுத்தும் கொள்கைகளும்,  நடவடிக்கை களுமேஅறிவிக்கப்பட்டுள்ளன.மொத்தத்தில் மத்திய பா... அரசின் பட்ஜெட் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, தேசத்தின் பொருளாதார கட்டமைப்பையும், சுயசார்புத் தன்மையையும் பெருமளவில் பாதிக்கச் செய்யும். காங்கிரஸ் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளைச் சாடி அதிகாரத்திற்கு வந்த பா... அதே கொள்கையை இன்னும் தீவிரமாகஅமல்படுத்தமுனைந்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு மத்திய பா... அரசின் இத்தகைய மக்கள் விரோத, தேச விரோத பட்ஜெட்டை வன்மையாகக் கண்டிக்கிறது. பா... அரசின் அபாயகரமான கொள்கையை எதிர்த்து முறியடிக்க ஒன்றுபட்டுச் செயலாற்றுமாறு அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

No comments: