Monday 21 July 2014

7 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் தாரைவார்ப்பு...

நாட்டின் இலாபகரமாக இயங்கிவரும் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கழகம் (ONGC) இந்திய இரும்பு தொழிற்சாலை (III) இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உள்ளிட்டு 7 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்திடும் திட்டத்தை மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
முந்தைய பாஜக அரசின் கீழ் அமைச்சர் அருண்சோரி தலைமையிலான பொதுத்துறை கலைப்புத்துறை செயல்பட்டது. அதேபோன்றே, நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக அரசிலும் பொதுத்துறைகளை கலைத்து தனியார்மயமாக்குவதற்கான துறை உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொதுத்துறை கலைப்புத்துறை தனியாருக்கு தாரைவார்க்கப்படும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கூறப்படும் நிறுவனங்களாவன:
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம் (ONGC) ஸ்டீல்அத்தாரிட்டி ஆப் இந்தியா (SAIL) இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL),இந்துஸ்தான் ஏரோநாட் டிக்ஸ் லிமிடெட், பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் (PFC) நேஷனல் ஹைடிரோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேசன் (NHPC) போன்ற நிறுவனங்களாகும். இவை இலாபகரமாக இயங்கி வருபவை.மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற பின்னர், இன்னும் 3 மாதங்களுக்குள் தனியார்மயமாக்க திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று நிதித்துறை அமைச்சக தகவல் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

No comments: