Saturday 19 July 2014

17.07.14 மதுரையில் திருமிகு.RLC-யுடன் முத்தரப்பு பேச்சு...

அருமைத் தோழர்களே! நமது BSNLEU + TNTCWU இரண்டு மாவட்ட சங்கங்களின் தொடர் முயற்சியின் அடுத்த கட்டமுன்னேற்றமாக   17.07.14 அன்று மதுரையில், மரியாதைக்குரிய மண்டல தொழிலாளர் ஆணையர் அவர்களிடம் நடந்த  முத்தரப்பு பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது.... 
திருமிகு.RLC-அவர்கள் + ஊழியர் தரப்பு + நிர்வாகத்தரப்பு அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தை 17.07.14 வியாழன் மதியம் 3 மணி முதல் 5 மணி  வரை மிகவும் கவனமாக  நடைபெற்றது. நமது BSNLEU சங்கத்தின் சார்பாக தோழர்கள், எம்.முருகையா-ACS, எஸ். சூரியன்-D.S, சி. செல்வின் சத்தியராஜ்-D.Pr, மூவரும், TNTCWU சங்கத்தின் சார்பாக தோழர்கள், N.சோணை முத்து-D.S, K.வீரபத்திரன்-D.Pr இருவரும், நிர்வாகத்தரப்பு சார்பாக...AGM(Hr), AGM(Plg), C.O & PRO ஆகியோரும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
நிர்வாகத்தரப்பின் சார்பாக "Man Power" கேபிள் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர் களுக்கு " Skilled Pay" தரவேண்டும் என்பதற்காக ஏற்கனவே, நிர்வாகத்தால் டெண்டர் பிப்ரவரி -2014-ல் முடிவான (As per NIT reference PC1-3-28/TENDER/MAN POWER/MA-SSA/2014-15/2 Dated 18.02.14) டெண்டர் சரத்தில் உள்ள 13 பணிகள், தற்போது 14.07.14 முதற்கொண்டு, டெண்டர் கண்டிசன் மாற்றப்பட்டுள்ளதாக, நிர்வாகம் கடிதம் கொடுத்ததை திருமிகு.RLC அவர்கள் சட்டப்படி ஏற்க முடியாது என அறிவித்தார். நமது ஊழியர் தரப்பில் கலந்து கொண்ட அனைவரும் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கையை, நியாயத்தை வலுவாக வலியுறித்தினர். நமது மாநில உதவிச் செயலர் தோழர்.எம்.முருகையா அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு விபரங்களையும், நமது மத்திய,மாநில,மாவட்டச்சங்கங்கள் எடுத்த முயற்சிகள், அதன் பயனாக பாராளுமன்றம் , BSNLகார்பரேட்,மற்றும் மாநில நிர்வாகங்கள் கொடுத்துள்ள உத்தரவுகளை  மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்தாமல் இருப்பதை ஆதாரங் களுடன்  எடுத்துக் கூறினார். அணைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்ட பின் திரு மிகு.RLC அவர்கள் கீழ்கண்ட முடிவுகளை அறிவித்ததை அணைத்து தரப்பினரும் (முத்தரப்பு) முடிவை ஏற்று  கையொப்பமிட்டனர்.
முடிவுகள் 
*   கேபிள் பணிபுரியும் "Man power" ஒப்பந்த ஊழியர்களின் பணித்தன்மையை கணக்கில் கொண்டு "Semi skilled" சம்பளம் வழங்க வேண்டும் என்ற முடிவை திரு மிகு.மண்டல தொழிலாளர் ஆணையாளர் அறிவித்தார்.(இம் முடிவை அமல்படுத்த GM-மதுரை விடுப்பில் இருப்பதால் 25.07.14-ம் தேதி வரை கால அவகாசம்  நிர்வாகத்தரப்பால் கோரப்பட்டது.)
*  ஹவுஸ் கீப்பிங் ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக காலத்தே வழங்காமல் தொடர்ந்து ஏமாற்றி வரும் ஒப்பந்தகாரர் எம்.பெரியசாமி மீது நடவடிக்கை என்ற தன்மையில் "Black list"செய்ய முடிவு செய்து நிர்வாகத்தால் கடிதம் அனுப்பப்பட்டது.
*    இனி வருங்காலங்களில் எந்த ஒப்பந்தகாரரும், ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதிமாதம் 7 முதல் 10-ம் தேதிக்குள் முறையாக சம்பளம் வழங்குவதற்கு நிர்வாகம் உத்தரவாதப் படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் BSNL நிர்வாகம் "Principal Employer"என்ற அடிப்படையில் BSNL நிர்வாகமே  குறித்த காலத்தில் சம்பளம் வழங்கவேண்டும்.
*   இனி எந்த ஒப்பந்தகாரரும் தொடர்ச்சியாக சம்பளம் தருவதில் சிக்கல் ஏற்பட்டு 3 மாதகால மாகின், சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரரை "Black List" செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
*   BSNL நிர்வாகம் ஒவ்வொரு ஒப்பந்தகாரரையும் குறித்த நேரத்தில் ஒப்பந்தஊழியர்களுக்கு சம்பளம், ESI,  மற்றும் EPF முறையாக வழங்குவதற்கான உத்தரவாதத்தை செய்ய முன்கூட்டியே  திட்டமிட்டு செயலாற்றிட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
       ....ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதி வழங்கிட்ட திருமிகு.RLC அவர்களுக்கும், நமக்கு உதவிட்ட தோழர்.எம்.முருகையா அவர்களுக்கும் நமது நன்றியும், பாராட்டுக்களும்.
       ----  என்றும் தோழமையுடன் ...எஸ். சூரியன்---D/S-BSNLEU.

No comments: