Wednesday 30 July 2014

காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கம் அள்ளிய இந்தியா.

தங்கம். தங்கம், தங்கம்; காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்தியா

 காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சுஷில்குமார்,அமித்குமார், மற்றும் இந்திய வீராங்கனை வினேஸ் தங்கப்பதக்கம் வென்றனர். இதுவரை 34 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா பதக்கப்படியலில் 7வது இடத்தில் இருந்தது.
மல்யுத்தத்தில் 3 தங்கம்: இன்று மல்யுத்த போட்டியில், இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. முதல் தங்கத்தை அமித் குமார் பெற்றுத்தந்தார். அவர், ஆண்கள் பிரிவு 57 கிலோ பிரிவில் எபிக்வெமினோமோ வெல்சனை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய வீராங்கனை வினேஸ், இங்கிலாந்தின் யானா ரட்டிகனை, மகளிர் 48 கிலோ பிரிவில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்
3வது தங்கத்தை சுஷில்குமார் பெற்றார். அவர்74 கிலோ பிரிவில், பாகிஸ்தானின் அப்பாசை வீழ்த்தி இந்தியாவுக்கு 10வது தங்கத்தை பெற்றுத்தந்தார்
85 கிலோ பளுதூக்குதல் 85 கிலோ பிரிவில், இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
துப்பாக்கி சுடுதலில் மேலும் பதக்கங்கள்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் இன்றும் மேலும் பதக்கங்கள் கிடைத்தன.
25 மீட்டர் ரேபிட் பைபர் பிரிவில், ஹர்ப்ரீட் சிங் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஆண்கள் பிரிவு துப்பாக்கிசுடுதலில் இந்திய வீரர் மனவ்ஜீத் சந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்தியாவின் லஜ்ஜா கோஸ்வாமி வெண்கலப்பதக்கம் வென்றார்.
இதன் மூலம், இந்தியா 10 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலப்பதக்கங்களுடன் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

No comments: