Thursday 3 April 2014

மம்தா கட்சியின் வன்முறை நியாயமாக தேர்தல் நடக்குமா?

தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் இடதுமுன்னணி தலைவர்கள் நேரில் முறையீடு
மக்களவைத் தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரசின் வன்முறைகள் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளன. இவ்வன் முறை சம்பவங்களுக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதி லிருந்து, தேர்தல்கள் நேர்மை யாகவும் நியாயமாகவும் நடை பெறுமா என்கிற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாநிலத்தில் பல கிராமங் களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்காளர் களை தங்கள் சொந்த கிராமங்களி லிருந்து விரட்டி அடித்திருக்கிறார்கள். தேர்தல் முடியும்வரை கிராமங்களுக்குத் திரும்பக்கூடாது என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பி, வாக்களிப்பதை உத்தரவாதப்படுத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்இவர் களின் குறிக்கோள் மக்கள் மத்தியில் அச்சஉணர்வை ஏற்படுத்தி அவர் களை வாக்களிக்கவிடாமல் தடுத்திட வேண்டும் என் பதேயாகும். இவர்களின் வன் முறை வெறியாட்டங்கள் ஒவ்வொன்றைக் குறித்தும் காவல் துறையினருக்கு தெரிவித்த போதிலும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வெறும் அமைதிப் பார்வை யாளர்களாகவே தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.
அது மட்டுமல்ல, சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரசாரிடமே பொய்ப் புகார்களைப் பெற்று பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குகளைப் புனைவதும், அட்டூழியத்தில் ஈடுபடுபவர் களை சுதந்திரமாகப் போக விடுவதும் நடைபெறுகிறது. இவ்வாறு பொய்ப் புகார்களைப் பெற்று வழக்குப் பதிவு செய்யமறுக்கும் நியாயமான காவல்துறை அதிகாரிகள் அச்சுறுத்தப் படுவதும் நடைபெறுகிறது.திரிணாமுல் காங்கிரசாரின் தாக்குதல்களிலிருந்து ஆளும் கட்சி அதிருப்தியாளர்களும் விட்டு வைக்கப்பட வில்லை.
மேற்கு வங்கத்தில் இன்றுள்ள நிலைமையில் தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டுமானால், அம் மாநிலத்தின் 42 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் காவல்துறை பார்வையாளர்கள் நியமிக் கப்பட வேண்டியது அவசிய மாகும்.மேற்கு மிட்னாப்பூர், பர்து வான், பங்குரா மற்றும் நாடியா மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் ஆளும் கட்சியினருக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறார்கள். மேற்கு மிட்னாப்பூர் காவல்கண்காணிப்பாளர் பொய்ப் புகார்களின் கீழ் இடதுசாரிக் கட்சி ஊழியர்களைக் கைது செய்துகொண்டிருக்கிறார். மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஒவ்வொரு நாளும்,இடதுசாரிக் கட்சி ஆதர வாளர்கள் வாக்களிக்கச் செல்லக்கூடாது என்று திரிணாமுல் காங்கிரசாரால் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.
மேலும் அவர் களிடம் தேர்தல் முடிந்தபின்உங்களைக் காப்பாற்றிட தலைமைத் தேர்தல் ஆணைய மோ அல்லது துணைப் பாது காப்புப்படையினரோ இங்கே இருக்க மாட்டார்கள்,’’ என்றும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது திரிணாமுல் காங்கிரசின் தலைவர்கள் இதேபோன்று பிரச்சாரத்தில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கடைப்பிடிக்கும் முறைகள் பலவற்றை உங்களால் கற் பனையே செய்ய முடியாது. வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களித்திட அனுமதிக்கப்பட வேண்டும்.2013 டிசம்பர் 19லிருந்து தங்களுக்கு எழுதிய 35 கடிதங் களின் பட்டியலையும் இவற்றின்மீது தலைமைத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. மனுவில் இடது முன்னணியின் தலைவர் பிமன்பாசு, சீத்தாராம் யெச்சூரி எம்.பி. உட்பட இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கையொப்ப மிட்டுள்ளார்கள்.      ----தீக்கதிர்.

No comments: