Wednesday 9 April 2014

செய்தி . . . துளிகள் . . .

Ø  மாணவர்களை கவர புதிய சிறப்பு ப்ரீபெய்டு திட்டம் : பி.எஸ்.என்.எல். அறிமுகம்
Ø  குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கான புதிய ப்ரீபெய்டு திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டத்தில் 20 உள்ளூர் மற்றும் தேசிய குறுஞ்செய்திகளை(எஸ்.எம்.எஸ்) இலவசமாக பெறலாம்.
Ø  மேலும் 45 நிமிஷம் பி.எஸ்.என்.எல். நிறுவன மொபைல் எண்கள் அல்லது இதர மொபைல் போன் எண்களுடனும் இலவசமாக பேசலாம்.
Ø  நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி அனுப்பும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.க்கு 5 பைசாவும், 10 கேபி டேட்டாவுக்கு 2 பைசா எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தொலைத் தொடர்பு சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது.
Ø  இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களைக் கவரும் நோக்கில் இப் புதிய சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Ø  இப்புதிய திட்டம் குறித்து முழு விவரங்களை சென்னை பி.எஸ்.என்.எல். இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
v  01-04-2014 முதல் 2.1 சத  IDA குறைப்பிற்கான DPE  உத்திரவு 
v  03/04/2014 அன்று  வெளியிடப்பட்டுள்ளது
v  IDA 90.5 சதத்திலிருந்து 88.4 ஆக குறைந்துள்ளது. 
ü  BSNLன்  செல் கோபுரங்களைப் பராமரிக்க புதிய நிறுவனம் துவங்குவது தொடர்பாக 21-04-2014 அன்று அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ளும் கூட்டம் டெல்லியில் நடைபெறும்இதில் நிர்வாகத்தின் கருத்துக்கள் முன்வைக்கப்படும். 
ü  BSNL - MTNL இணைப்பு சம்பந்தமாக சங்கங்களுடன் கலந்து பேசி இறுதி முடிவெடுக்கப்படும் என்று BSNL  நிர்வாகம் அறிவித்துள்ளது. 
·         இரயில்வே துறையில் புதிய போனஸ் வரையறையை உருவாக்க அதிகாரிகள் குழுவை இரயில்வே நிர்வாகம் நியமித்துள்ளது
·         இதற்கு இரயில்வே சங்கங்கள் உடன்படவில்லை. 
v  ONGC நிர்வாகம் தனது ஊழியர்களுக்கானசீருடை,சலவைப்படி,தையற்கூலி மற்றும் சிற்றுண்டிப்படிஆகியவற்றிற்காக ஆண்டிற்கு மொத்தமாக பணப்பட்டுவாடா செய்து வருகின்றது. இந்த ஆண்டிற்கான தொகை ரூ.84,332/- ஆகும்.இது 4 தவணைகளாக பட்டுவாடா செய்யப்படும்.

No comments: