Friday 11 April 2014

11.04.14 இன்று முதல் "பூத் சிலிப்' விநியோகம் . . .

மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்குச்சாவடி சீட்டுகளை (பூத் சிலிப்) விநியோகம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை (ஏப். 11) தொடங்கவுள்ளது. இந்தப் பணிகளை வாக்குச் சாவடி அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.இது குறித்து, செய்தியாளர் களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது: புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லா தவர்களுக்கு வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கப்படும். புகைப்படத்துடன் கூடிய இந்த வாக்குச்சாவடி சீட்டுகளைக் கொண்டு தேர்தலில் வாக்களிக்கலாம். வாக்குச் சாவடி சீட்டுகளை விநியோகிக்கும் பணி வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 11) தொடங்கும். வரும் 19 ஆம் தேதி வரை வாக்குச் சாவடி சீட்டுகளை அதிகாரிகள் விநியோகம் செய்வர்.அதன் பிறகு, தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்குச் சென்று வாக்குச் சாவடி சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்தச் சீட்டுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்தச் சீட்டுக்குப் பின்புறத்தில் வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும்.
ரூ.34 கோடி பறிமுதல்: தமிழகம் முழுவதும் நடந்த வாகன சோதனைகளில் இதுவரை 17.46 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், ரூ.17.46 கோடி மதிப்பிலான நகைகள், ஜவுளிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.34.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.10.85 கோடியும், மதுரையில் ரூ.5.55 கோடியும் அடங்கும் என்றார் பிரவீண்குமார்.

No comments: